Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாகோட் படத்துக்கு கூடுதல் சம்பளத்தை உயர்த்தி வாங்கிய தளபதி விஜய்.. ரஜினிகாந்தை இரு மடங்கு ஜாஸ்தி.....

கோட் படத்துக்கு கூடுதல் சம்பளத்தை உயர்த்தி வாங்கிய தளபதி விஜய்.. ரஜினிகாந்தை இரு மடங்கு ஜாஸ்தி.. !

தளபதி விஜய் அண்மையில் கோட் திரைபடத்துக்காக கேரளா பயணித்தார். அவருக்கு கேரளாவில் தமிழகத்துக்கு இணங்க ஒரு பெரிய படைபலம் உள்ளது. பல ஆண்டுகள் கழித்து கேரளா வந்த அவரை ஆரவாரத்துடன் ரசிகர்கள் வரவேற்றனர்.

- Advertisement -

திருவனந்தபுரத்தின் ஸ்டேடியத்தில் க்ளைமாக்ஸ் காட்சிகள் முடிக்கப்பட்டு இன்று சென்னை திரும்பினார் தளபதி விஜய். அக்டோபர் மாதம் துவங்கிய ஷூட்டிங் சென்னை, வெளிநாடு என மாறி மாறி தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கிறது.

இந்த மாதத்துடன் இந்தியாவில் ஷூட்டிங் முடிக்கப்பட்டு கடைசி கட்ட அட்டவணையை வெளிநாட்டில் எடுக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். ஏப்ரல் முதல் வாரத்துடன் அனைத்துக் கட்ட ஷூட்டிங் பணிகளும் முடிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு விரைந்து செல்லவுள்ளனர்.

- Advertisement -

ஷூட்டிங் முடிந்த கையோடு விஜய் குரலில் யுவனின் இசையில் முதல் பாடலும் வெளியாகும் என உறுதியளித்துள்ளனர். கோட் படத்திற்காக தளபதி விஜய் 150 – 200 கோடி வரை வாங்குவதாக முன்னர் சமூக வலைத்தளத்தில் பேச்சுகள் பரவின. தற்போது ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிருவதிண்டம் கூடுதல் சம்பளம் கேட்டு அவர்களும் அதற்க்கு ஒப்புக் கொண்டு கொடுத்துள்ளனர்.

- Advertisement -

அதாவது இப்படத்துக்கு தளபதி விஜய் மொத்தமாக 1250 கோடிக்கு அருகில் வாங்குகிறாராம். தென்னிந்தியya நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக தளபதி விஜய் திகழ்கிறார். திடீரென கூடுதல் சம்பளம் கேட்டும் அதனை மறுக்காமல் கொடுத்ததற்கு மிகப் பெரிய காரணம் வசூல் சாதனைகள் தான்.

தளபதி விஜய்யை வைத்து படம் செய்தால் நிச்சயம் குறைந்தது 200 கோடியாவது வந்துவிடும். அவரின் லியோ படம் 600 கோடிகளுக்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றியடைந்தது. கோட் திரைப்படம் புதிய வகையில் உருவாகுவதால் கூடுதல் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. சுலபமாக 500 கோடிகள் தாண்டிவிடும். விமர்சனங்கள் சிறப்பாக வந்தால் 750 கோடிக்கு மேல் எதிர்பார்க்கலாம்.

ஆகஸ்ட் 15 உலகெங்கும் வெளியாகும் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்தார். இந்தப் படத்துடன் மற்றொரு படம் நடித்துவிட்டு விஜய் முழு நேர அரசியலுக்கு செல்லவிருப்பதால் இம்முறை கொண்டாடி தீர்த்துவிடுவர் ரசிகர்கள்.

Most Popular