Wednesday, October 30, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமா16 ஆண்டுக்கு முன் அரசியலுக்கு வருவீங்களா என கேள்வி? விஜய் என்ன பதில் சொன்னாருனு பாருங்க!

16 ஆண்டுக்கு முன் அரசியலுக்கு வருவீங்களா என கேள்வி? விஜய் என்ன பதில் சொன்னாருனு பாருங்க!

தளபதி விஜயின் அரசியல் வருகை குறித்து பேசாத ஆட்களே இல்லை. ஏதாவது ஒரு பிரபலத்திடம் தற்பொழுது பேட்டி எடுத்தால் கூட முதல் கேள்வியாக விஜயின் அரசியல் குறித்து தான் கேட்கப்படுகிறது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தையே பிடித்த நடிகர் தளபதி விஜய்.  முற்றும் துறந்து  தற்பொழுது அரசியல் வாழ்க்கையில் ஈடுபட போவதாக அறிவித்தது தமிழ் மக்களின் மிகவும் பரபரப்பில் ஆழ்த்தியது.

சினிமாவில் நல்ல பெயர் பெற்று அடுத்த சூப்பர் ஸ்டாரா என்ற போட்டிக்கு கூட தகுதி வாய்ந்த இடத்தை பிடித்த தளபதி விஜய் திடீரென்று அரசியலுக்கு வந்தது ஏன் என்று கேள்வி பலரிடமும் இருக்கிறது. ஆனால் உண்மையிலேயே தளபதி விஜய் திடீரென்று இந்த முடிவை எடுத்தாரா என்பதை தான் சரியான கேள்வியாக இருக்கிறது.

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் தளபதி விஜய்யிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது .இது பொதுவாக எல்லா பிரபலங்களிடமும் கேட்கப்படும் கேள்விதான் ஆனால் அதற்கு தளபதி விஜய் கூறிய பதில் இப்பொழுது அவர் செய்திருக்கும் செயலுக்கு பொருத்தமாக அமைந்துவிட்டது.

- Advertisement -

அந்தக் கேள்விக்கு தளபதி விஜய் எனக்கு அரசியலில் விருப்பம் இருக்கிறது. ஆனால் அதற்கு சரியான நேரம் இது இல்லை .நான் விஜய் ரசிகர் மன்றம் என்ற ஏக்கத்தின் மூலம் என்னுடைய ரசிகர்களை தயார் செய்து வருகிறேன்.

அரசியல் மிகவும் சீரியசான விஷயம். அதில் விளையாடுவது சரியல்ல. சரியான நேரம் வரும் பொழுது நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தார் தளபதி விஜய்.

என்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி இருக்கிறேன் .என் ரசிகர்களை வைத்து மக்கள் பணிகளை செய்து வருகிறேன். அரசியலுக்கு தேவையான அடிப்படை அஸ்திவாரங்களை  போட்டு வருகிறேன் என்று கூறினார்.

தளபதி விஜய் கூறியபடி இத்தனை ஆண்டுகளும் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து பலரின் மனதை வென்றிருக்கிறார். தளபதி விஜய் அதேபோல் கலைஞர் மு .கருணாநிதியும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் இல்லாத இந்த நிலையும், தற்பொழுது முதலமைச்சர் ஆக இருக்கும் ஸ்டாலினும், அதற்குப் பிறகு உதயநிதி தான் அந்த கட்சிக்கு பொறுப்பேற்பார் என்ற யூகத்தாலும் இதுதான் சரியான நேரம் என்று கருதி அரசியலில் இறங்கி விட்டார் தளபதி விஜய்.

இது அவர் திடீரென்று எடுத்த முடிவு இல்லை என்பதற்கு இதுவே மிகப்பெரிய ஆதாரம் .புலி போல் பதுங்கி இருந்து பாய்ந்து இருக்கிறார் தளபதி விஜய். அவருடைய அரசியல் யுகம் வெல்லப் போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Popular