Friday, May 3, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாதமிழக வெற்றி கழகம் சார்பாக தளபதி விஜய் எடுத்த அதிரடி முடிவு..! முதல் மாநாடு...

தமிழக வெற்றி கழகம் சார்பாக தளபதி விஜய் எடுத்த அதிரடி முடிவு..! முதல் மாநாடு எப்போது?மக்கள் ஆதரிப்பார்களா ..? இல்லையா..?

தளபதி விஜய் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த நிலையில் அதை குறித்து அப்டேட்ஸ்கள் எல்லாம் எப்பொழுது வரும் என்று அவர் திரைப்படத்திற்கு எதிர்பார்த்ததை விட அவருடைய அரசியல் பற்றிய அறிக்கைகளுக்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள் அதாவது தற்பொழுது தொண்டர்கள்.

- Advertisement -

தமிழக வெற்றி கழகம் என்று கட்சியை தொடங்கி இருக்கும் தளபதி விஜய் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் கலந்து கொள்ள போவதில்லை என்ற அறிக்கையும் வெளியிட்டிருந்தார். அதனால் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலில் தான் போட்டியிட போவதாகவும் கூறியிருந்தார் தளபதி விஜய்.

இந்த நிலையில் தற்பொழுது புதிதாக ஒரு அப்டேட்ஸ்கள் தளபதி விஜய் துவங்கிய கட்சியிலிருந்து வந்திருக்கிறது. கட்சி தொடங்கி தன்னுடைய முதல் மாநாட்டை அவரின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி நடத்தப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தன்னுடைய முதல் மாநாட்டை மதுரை ,திருச்சி திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் நிகழ்த்துவார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

அந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜயின் முதல் மாநாடு என்பதால் எதிர்பார்ப்பு  அதிகமாக இருக்கிறது ஒரு நடிகனாகவே பார்த்த தளபதி விஜய் அரசியல்வாதியாக பார்க்க போகும் முதல் மாநாடு அது என்பதால் அதில் மக்கள் பேரார்வம் காட்டி வருகிறார்கள்.

- Advertisement -

பொதுவாக ஒரு கட்சியில் இருந்து வடக்கு மாவட்டம் ,தெற்கு மாவட்டம் என்று நிர்வாகிகளை நியமிப்பார்கள் .அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக 100 மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிர்வாகிக்க போவதாக கூறியிருக்கிறார்கள்.

மேலும் வரக்கூடிய இந்த நாடாளுமன்ற  தேர்தலில் வெற்றி பெறப்போகும் கட்சியை பொறுத்துதான் அடுத்தடுத்து எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை தளபதி விஜய் முடிவு செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது .இதுபோன்று தன் கட்சி சார்பாக தளபதி விஜய் அதிரடியாக பல முடிவுகளை இனி எடுப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Most Popular