பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் அகிலன். இந்தத் திரைப்படத்தை பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தாண்யா மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். சாம் சி எஸ் இந்தத் திரைப்படத்திற்கு இசைய வைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தினை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெரும்பொருட்ச அளவில் தயாரித்து இருக்கிறது.
இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த நான்காம் தேதி வெளியாக்கியது. வெளியாகிய இரண்டு நாட்களிலேயே 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. ட்ரெய்லர் வெளியீட்டிற்கு பின் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இன்னும் அதிகமாக இருக்கிறது. படம் துறைமுகத்தில் நடக்கும் அரசியல் சார்ந்த விஷயங்களையும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை துறைமுகங்களும் கப்பல் போக்குவரத்தும் எவ்வாறு தீர்மானிக்கிறது என்பதையும் பேசுவது போல் உள்ளது. உலகமயமாக்கல் போன்ற விஷயங்களை பேசுவதை ட்ரைலரில் வரும் வசனங்களின் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்நிலையில் படத்தின் தணிக்கை நிறைவடைந்து படத்திற்கு யு/ஏ சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் படத்தின் கால அளவு பற்றிய புதிய தகவல்களை பகிர்ந்திருக்கிறது பட குழு. அந்தத் தகவல்களின்படி அகிலன் திரைப்படம் இரண்டு மணி நேரமும் 15 நிமிடங்களும் கொண்டதாக எடிட் செய்யப்பட்டிருப்பதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தில் இருக்கக்கூடிய ஒரு சில அரசியல் வசனங்களையும் சில ஆபாச வார்த்தைகளையும் கொண்ட காட்சிகளை தணிக்கை குழு ஆட்சேபம் தெரிவித்ததால் படத்திலிருந்து அந்த இரண்டு நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு 2 மணி நேரமும் 15 நிமிடங்களும் ஓடக்கூடிய அளவிற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜெயம் ரவி இதற்கு முன் நடித்த பூலோகம் திரைப்படத்தையும் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் திரைப்படத்திலும் விளையாட்டுத் துறையில் நடக்கும் உலகமயமாக்களையும் அரசியலையும் சுட்டிக்காட்டி இருப்பார். அதே போன்று இந்த திரைப்படத்திலும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து சார்ந்த உலகமயமாக்கல் மற்றும் அதனைச் சுற்றி நடக்க கூடிய அரசியல்களை தோளிருத்து காட்டும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்பதை அகிலன் படத்தின் ட்ரெய்லரில் இருக்கும் வசனங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
இதன் காரணமாக படத்தில் இரண்டு நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் இன்று அறிவித்திருக்கின்றனர். இம்மாதம் பத்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக்கியது . அதன் பிறகு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து அவரது அடுத்த திரைப்படம் ஆன அகிலன் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான காட்சிகள் துறைமுகங்களில் படமாக்கப்பட்ட திரைப்படம் பல தடைகளையும் தாண்டி வெளியிட்டிருக்கு தயாராக வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.