சினிமா

“பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாத்தி ஆடியோ லான்ச்! சூப்பர் ஸ்டார் கலந்து கொண்டாரா? வீடியோ லிங்க்!

தனுஷ் நடிப்பில் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் வாத்தி . இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றது .

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் வாத்தி படத்தை தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தில் தனுசுடன் சம்யுக்தா மேனன் , சமுத்திரக்கனி சாய் கிஷோர் ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார் . யூடியூபில் வெளியான திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இந்நிலையில் படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாவதை தொடர்ந்து படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகை சார்ந்த முன்னணி சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருப்பதாக தெரிகிறது . நடிகர் தனுஷின் ஏராளமான ரசிகர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர் . நிகழ்ச்சியின் போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் படத்தின் பாடல்களை மேடையில் இசைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் தனுஷ் மற்றும் நாயகி சமயத்த மேனன் இயக்குனர்வம் வெங்கி அட்லூரி மற்றும் தயாரிப்பாளர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்துகொண்டு சிறப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன . மேலும் இதில் கலந்துகொண்ட திரைத்துறை பிரபலங்கள் மற்றும் விருந்தினர்கள் பற்றிய விவரங்கள் இதுவரை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது .

Advertisement

தனுஷ் இந்த நிகழ்விற்கு எல்லா படத்திற்கும் வருவதைப் போலவே வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையில் வந்து சிறப்பித்தார் . கேப்டன் மில்லர் படத்திற்காக நீண்ட தலை முடி மற்றும் தாடியை வளர்த்து வரும் தனுஷ் அந்த தோற்றத்துடனே விழாவிற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது . ஏராளமான ரசிகர்களின் உற்சாகமான வரவேற்பில் வாத்தி படத்தின் ஆடியோ வெளியீடு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது . இந்த நிகழ்வினை பற்றிய மேலதிக விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது .

மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன . நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினியும் தனுசும் இந்த நிகழ்ச்சியின் மூலம் சந்தித்துக் கொண்டார்கள் என ட்விட்டரில் வார்த்தை படத்தின் ஆடியோ லான்ச் போட்டோக்கள் வைரலாகி கொண்டு இருக்கிறது . தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து சம்பந்தமாக சமீப காலமாக ரஜினியும் தனுசும் சந்திப்பதை தவிர்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் வார்த்தை படுத்தின ஆடியோ லான்ச் மூலம் இவர்கள் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டதாக வரும் தகவல்கள் தனுசு ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன .

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top