சினிமா

“தளபதி விஜயின் படத்திற்கு நோ சொன்ன தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை”- என்ன படம் என்று தெரிந்தால் அசந்து போவீங்க!

தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக 25 வருடங்களுக்கு மேலாக இருப்பவர் தளபதி விஜய். தற்போது இவரது நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் விஜயுடன் த்ரிஷா, இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது .

தமிழ் சினிமா ரசிகர்கள் யாருமே ஜோதிகாவை மறந்திருக்க முடியாது. வாலி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த இவர் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த முகவரி திரைப்படம் ஒரு வெற்றி படமாக அமைந்தது. விஜய் நடிப்பில் உருவான குஷி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ஜோதிகா. இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின் சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

Advertisement

தளபதி விஜயுடன் குஷி மற்றும் திருமலை படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் ஜோதிகா. மேலும் ஒரு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. ஆனால் தனது கதாபாத்திரம் வலுவாக இல்லை எனக் கூறி அந்த வாய்ப்பை ஜோதிகா உதறித் தள்ளியதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வலம் வருகின்றன. அந்தத் திரைப்படம் வெளியாகி ஆறு வருடங்களுக்குப் பிறகு இந்த செய்தி தற்போது வைரலாகி இருக்கிறது.

2017 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்த மெர்சல் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படத்தில் நித்யா மேனன் காஜல் அகர்வால் மற்றும் சமந்தா என மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்தத் திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் தான் தற்போது சினிமா வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி இருக்கிறது.

Advertisement

அந்த செய்திகளின்படி மெர்சல் திரைப்படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதில் தந்தை கதாபாத்திரமாக வரும் விஜய்க்கு நித்யா மேனன் ஜோடியாக நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்திற்கு இயக்குனர் அட்லி முதலில் ஜோதிகாவிடம் தான் நடிக்க கேட்டாராம். ஜோதிகாவும் சம்மதம் தெரிவித்து இரண்டு நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் தனது கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்று கருதிய அவர் இயக்குனரிடம் ஒரு சில மாற்றங்களை செய்யச் சொல்லி இருக்கிறார் ஆனால் அட்லீ அதற்கு மறுத்து விடவே படப்பிடிப்பிலிருந்து யாரிடமும் சொல்லாமல் ஜோதிகா வெளியேறியதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த செய்தி தான் இப்பொழுது இணையவாசிகளிடம் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top