சினிமா

“தளபதிக்கு எதிராக தொடர்ந்து பரப்பப்படும் அவதூறு! முற்றுப்புள்ளி வைப்பாரா ?

தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கு பிறகு அதிகமான ரசிகர்களைக் கொண்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவரது நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் வெற்றிகரமாக உருவாகிக் கொண்டிருக்கிறத. இந்தத் திரைப்படத்தில் திரிஷா மன்சூர் அலிகான் கௌதம் வாசுதேவ் மேனன் சஞ்சய் தத் என மிகப் பெரிய திரை பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது. இத்தனை படத்தின் படப்பிடிப்புகள் மும்முறமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டிருக்கின்றன.

நீண்ட காலமாக சினிமாவில் எந்தவித சர்ச்சையிலும் சிக்காத தளபதி விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தற்போது அடுத்தடுத்த சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளன. அவர் தனது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் தாய் சோபனா ஆகியோரை விட்டு பிரிந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனி வீட்டில் வசித்து வருகிறார். இது அவருக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இவ்வாறு வசித்து வருவதாக செய்திகள் வெளியாயின. ஆயினும் சில பேர் தளபதி அவரின் மனைவியின் பேச்சை கேட்டு தான் தாய் தந்தையை விட்டு பிரிந்து வந்ததாக கோடம்பாக்கத்தில் கிஸ் கிசுக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில் தற்போது புதிய வதந்தி ஒன்று பரவி தமிழ் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபல பாலிவுட் விமர்சகர் ஆன உமர் சந்து கடந்த சில தினங்களாகவே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா நடிகர்களை பற்றிய செய்திகளை தனது ட்விட்டரில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இவர் சமந்தாவை பற்றியும் தனுசை பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்திகளை வெளியிட்டு இருந்தார். தற்போது தளபதி விஜயின் திருமண வாழ்க்கையைப் பற்றி பதிவிட்டு இருக்கிறார். இவரது பதிவுகள்யாவும் சர்ச்சைக்குரியவையாக உள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் தளபதி விஜய் பிரபல தமிழ் நடிகையுடன் திருமணம் தாண்டிய காதலில் இருப்பதாக பதிவு செய்திருந்தார். மேலும் அந்த நடிகைக்கு ஒரு விலை உயர்ந்த சொகுசு ரக கார் ஒன்றை பரிசளித்ததாகவும் தெரிவித்திருந்தார் . அந்த நடிகை வேறு யாரும் அல்ல. பைரவா மற்றும் சர்க்கார் படங்களில் தளபதியுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ் தான் என தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இதனால் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. தளபதி ரசிகர்கள் அந்த திரை விமர்சகரை கடுமையாக தாடி வந்தனர் . தேவையில்லாமல் ஆதாரம் இல்லாத தகவல்களை பரப்ப வேண்டாம் என அவரது பதிவிற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Advertisement

இந்நிலையில் மீண்டும் புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் உமர் சந்து. இவர் வெளியிட்டு இருக்கின்ற புதிய பதிவு ஒன்றில் தளபதியா அவரது மனைவி சங்கீதா ஆகியோருக்கு இடையே மிகப்பெரிய சண்ட இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 19ஆம் தேதி விஜய்க்கும் மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து விஜயின் மனைவி சங்கீதா வரை கடுமையாக எச்சரித்ததாகவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். தளபதி விஜய் பற்றி தொடர்வது அவர்களை பரப்பி வரும் பாலிவுட் விமர்சகர் உமர் சந்து மீது பயங்கர கோபத்தில் இருக்கிறது விஜய் தரப்பு . இந்த விஷயம் தொடர்பாக விரைவில் முற்று புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top