Tuesday, April 23, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஇந்த தடவை ஆஸ்கர் நிச்சயம் ! 5 பிரிவுகளில் இடம் பெற்றிருக்கும் இந்திய திரைப்படங்கள் !

இந்த தடவை ஆஸ்கர் நிச்சயம் ! 5 பிரிவுகளில் இடம் பெற்றிருக்கும் இந்திய திரைப்படங்கள் !

அகாடமி விருதுகள் என்றும் அழைக்கப்படும் ஆஸ்கார் விருதுகள் உலகம் முழுவதும் உள்ள பொழுதுபோக்கு துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அவை ஒவ்வொரு ஆண்டும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸால் வழங்கப்படுகின்றன மற்றும் அவை சினிமா தயாரிப்பில் சிறந்து விளங்குவதற்கான அடையாளமாகும்.

- Advertisement -

இதுவரை 8 ஆஸ்கர் அவார்டுகளை இந்தியர்கள் வாங்கியிருக்கிறார்கள். ஆஸ்கர் அவார்டு வாங்கிய முதல் இந்தியர் ஒரு பெண் என்பது கூடுதல் செய்தி. ‘பானு அத்தையா’ “காந்தி” திரைப்படத்தில் “சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான” தங்கக் கோப்பையைப் பெற்றார்.

தொடர்ந்து ஆஸ்கர் அவார்ட்க்கு நிறைய இந்திய  படங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அந்த வரிசையில் கடந்த வருடம் நடிகர் சூர்யா நடித்து வெளியான ‘ஜெய்பீம்’ உட்பட, ஆனால் அந்த படம் நிறைய விவாதங்களுக்கு உள்ளானது.

- Advertisement -

2009 தமிழர்களுக்கு முக்கிய வருடமாகும். முதல் முறையாக ஒரு தமிழர், இரண்டு ஆஸ்கர் தங்க அவார்ட்களை ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்திற்காக வாங்கினார். முதல் விருது ‘சிறந்த ஒலிக்கலவை’ பிரிவில் ரசூல் பூக்குட்டி க்கு கிடைத்தது, அதைத் தொடர்ந்து குல்ஜாருடன் இணைந்து சிறந்த அசல் பாடலுக்கான இரண்டு விருதுகளை ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் பெற்று,  அந்த மேடையிலேயே அவரின் தாய்மொழியான தமிழில் பேசி மாஸ் காட்டினார்.

- Advertisement -

இது ஒருப்புறமிருக்க 2022 கான 95 வது நிகழ்வு ஆஸ்கர் 2023 ஆம் மார்ச் மாதம் நடக்க உள்ளது. ஆஸ்கர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட  இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டிருப்பதை தொடர்ந்து அதில் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் ‘நாட்டு கூத்து பாடல்’ ‘பெஸ்ட் ஒர்ஜினல் சாங்க்’ என்ற பிரிவில் போட்டி போடுகிறது. சர்வதேச படப்பிரிவில் இந்தியாவிலிருந்து குஜராத் மொழிபடமான ‘லாஸ்ட் ஃபிலிம் ஷோ’ தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.  டாக்குமென்ட்ரி ஃபியூச்சர்  படமாக ‘ஆல் தட் பரீத்ஸ்’ என்ற படமும்  சிறந்த ஆவணப்படமாக  ‘எலிஃபாண்ட் விஸ்பர்’ என்ற படமும்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த இந்திய மொழி படங்களில் ஏதேனும் ஒரு படம் ஆஸ்கார் விருதுகளை பெறும் என்ற நம்பிக்கையில்  இந்திய  திரை உலகம் உள்ளது.

Most Popular