Friday, December 6, 2024
- Advertisement -
Homeசினிமாதுணிவு படத்தில் இணையும் பிபி நட்சத்திரங்கள்; ரசிகர்கள் செம்ம குஷி!

துணிவு படத்தில் இணையும் பிபி நட்சத்திரங்கள்; ரசிகர்கள் செம்ம குஷி!

எச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் துணிவு. இப்படத்தினை இந்திய திரைப்பட பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். இதே கூட்டணி நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தினை தொடர்ந்து மூன்றாவதாக துணிவு படத்தில் இணைந்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் துணிவு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகிறது என தெரிவித்துள்ளார். படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு முன்பே உறுதி செய்துள்ளது.

மேலும் இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத்,கதாநாயகியாக மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, பகவதி பெருமாள், மகாநதி சங்கர், யோகி பாபு ,ஜிம் சுந்தர், நடிக்க உள்ளனர்.

- Advertisement -

பிக் பிக் பாஸ் 5 நட்சத்திரங்களான அமீர் , பாவணி ஜோடி அனைவருக்கும் பிடித்தமான ஒரு ஜோடி. இவர்கள் பிக் பாஸ் 5 வீட்டிற்குள் இருந்தபோது அமீர் தனது காதலை பாவணியிடம் பல முறைகள் சொல்லியும் பாவனி அவரது காதலை நிராகரித்துக் வந்திருந்தார். மேலும் பிபி.5 வீட்டை விட்டு வெளியே வந்தும் இவர்கள் பற்றி தினமும் பல சுவாரசியமான தகவல்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது.

- Advertisement -

இவர்கள் கலந்து கொண்ட பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது காதலை அமீர் பாவணியிடம் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான தோரணையில் சொல்லி வந்தார். ஆனால் பாவணி அதற்கு எவ்வித பதிலும் கூறவில்லை. இவர்கள் பல ரசிகர்களை கவர்ந்து டைட்டில் வின்னர் ஆகவும் வெற்றி பெற்றுள்ளனர். இறுதியில் பாவணி அமீர் காதலை ஏற்று தற்போது பல ப்ராஜெக்ட்களை செய்து வருகின்றனர். இந்த ஜோடிக்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.

இச்சமயத்தில் நேற்று பாவனி, அமீர், மாஸ்டர் படத்தில் நடித்த சிபி ஆகிய மூவரும் துணிவு படத்தில் இணைவதாக பாவனி ஒரு புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர்கள் துணிவு படத்தில் இணைந்திருப்பதால், இந்த ஜோடியின் ரசிகர்கள் செம்ம குஷியில் இருக்கின்றனர்.

Most Popular