சினிமா

விஜய்யை முந்திய அஜித்! நிஜமாவே அஜித் ரசிகர்கள் துணிவு தான்! ட்விட்டரில் புதிய ரெக்கார்ட்!

பிரபல தயாரிப்பாளரும் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரிப்பில் அஜித் ஹச். வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. பல மாதங்களாக நடைபெற்று வந்த இப்ப படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று மாலை வெளிவந்தது.

மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வந்தவுடன் அஜித் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் காலையிலிருந்து ட்ரெண்ட் செய்து அதகலப்படுத்தி விட்டனர். பர்ஸ்ட் லுக் போஸ்ட்டை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அஜித்தின் புதிய தோற்றத்துடன் துணிவு என்ற படத்தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் போனிக் கபூர்.

Advertisement

பல மாதங்களாக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மாபெரும் மகிழ்ச்சியையும் படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.

ட்விட்டரை தெறிக்கவிட்ட அஜித் பர்ஸ்ட் லுக்

இந்தாண்டு ஜூன் மாதம் விஜய் பிறந்தநாளன்று வம்சி இயக்கத்தில் வெளிவந்த வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதுவரை 23.5 ஆயிரம் ரீ-ட்வீட் மற்றும் 72 ஆயிரம் லைக்ஸ்களை வாங்கி குவித்தது. செப்டம்பர் 21ம் தேதி மாலை அஜித்தின் துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்த சில மணி நேரத்தில் 27 ஆயிரம் ரீ-ட்விட் மற்றும் 79.4 ஆயிரம் லைக்ஸ், விஜய் படத்தின் சாதனையை முறியடித்து புதிய உச்சம் தொட்டது. (லைக்ஸ் மற்றும் ரீ-ட்வீட் செப்டம்பர் 21ம் தேதி நிலவரப்படி)

Advertisement

(இரண்டு படத்தின் தயாரிப்பாளர்கள் வெளியிட்ட போஸ்டரை வைத்து மட்டுமே இந்த புள்ளிவிவரம் கணக்கிடப்பட்டுள்ளது.)

இது வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜ் மற்றும் இந்தி தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் பதிவினை வைத்து ஒப்பிட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top