Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாதுணிவு டிரெய்லர் எப்படி ரீலீஸ் ஆகுது தெரியுமா ? இந்திய சினிமாவில் இதுதான் முதல் முறை...

துணிவு டிரெய்லர் எப்படி ரீலீஸ் ஆகுது தெரியுமா ? இந்திய சினிமாவில் இதுதான் முதல் முறை !

பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கின்ற நடிகர் அஜித்குமாரின் ‘துணிவு’ படத்திற்கான ப்ரோமோ வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று பட தயாரிப்பு நிறுவனம் அந்தப் படத்தின்  கதாபாத்திரங்களின் பெயர்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியது. ஆனால் நாயகன் அஜித்தின் பெயர் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இந்த அறிவிப்பானது ரசிகர்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டமாக இன்று வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கடந்த சில தினங்களாகவே படத்தின் நாயகன் தல மற்றும்  படக் குழுவினர் படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து பட குழுவினர்  ரசிகர்களுக்கு அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை கொடுத்து  அவர்களின் எதிர்பார்ப்பை கூட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த வருடத்தின் கடைசி நாள் ஆன இன்ற  துணிவு நாளாக அறிவித்துள்ளது படக்குழு . இதனால்  இந்த தினம் முடிவதற்குள் படத்தைப் பற்றிய மிகப் பெரிய ஒரு செய்தி  கண்டிப்பாக வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர் .

ஏற்கனவே படத்தின் டிரைலர்  டிசம்பர் 31ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று  ட்ரைலரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். துணிவு படத்தின் டிரைலரை மிகப் பிரம்மாண்டமான முறையில்  உலக சாதனையாக  வெளியிட இருக்கிறது படக்குழு அதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது .

- Advertisement -

அந்த அறிவிப்பின்படி  உலக சினிமா வரலாற்றிலேயே  முதல்முறையாக அஜித்தின்  துணிவு  படத்தின் டிரைலரானது  ஹாலோகிராம் என்ற தொழில்நுட்பத்தின் மூலம்  வெளியிடப்பட இருக்கிறது என்பதுதான். ஆம் இந்த படத்தின் ட்ரைலர் மலேசிய நேரப்படி  இரவு 11 மணிக்கு  கோலாலம்பூரில் உள்ள  வேர்ல்ட் சிட்டி சென்டரில்  வெளியிடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை இந்தப் படத்தின் மலேசியா உரிமைகளை வாங்கியுள்ள நிறுவனம்  அறிவித்திருக்கின்றது. இதன் மூலம் இப்படம் உலகின் முதல் முதலில் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் வெளியிடப்படும் டிரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

- Advertisement -

இயக்குனர் ‘ஹெச்.வினோத்’ அவர்களின் இயக்கத்தில் போனி கபூரின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி உள்ள  இத்திரைப்படத்தின்  தியேட்டர் உரிமைகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன.இந்தப் படம் ‘தல’ அஜித்குமாரின் பிரம்மாண்டமான ரிலீஸ்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . ஜிப்ரான் இசையமைத்துள்ள  இந்தத் திரைப்படத்தில் மஞ்சு வாரியர்  சமுத்திரக்கனி பகவதி சக்திவேல் ‘ஜான் கொக்கன்’  மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

Most Popular