Thursday, March 28, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாவிஸ்வாசம் சாதனையை தகர்த்த துணிவு.. புதிய மைல்கல்லை எட்டும் அஜித்

விஸ்வாசம் சாதனையை தகர்த்த துணிவு.. புதிய மைல்கல்லை எட்டும் அஜித்

- Advertisement -

கடந்த ஜனவரி 11ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான துணிவு திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு பொங்கல் விருந்தாகவே அமைந்தது. வலிமை திரைப்படத்தின் கலவையான விமர்சனத்திற்கு பிறகு வினோத்துடன் கூட்டணி சேர்ந்த அஜித் பெரிய வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். மேலும் விஜயின் வாரிசுடன் போட்டி போடுவதால் துணிவு வெற்றி பெறுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் துணிவு திரைப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் வாரிசை விட அதிக வசூலை பெற்று சாதனை படைத்தது.

வங்கி கொள்ளை, வங்கியில் நடைபெறும் மோசடிகள்,வங்கிகளால் பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட துணிவு திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடையும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அஜித் திரைப்பட வாழ்க்கையில் அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்றால் அது விசுவாசம் தான். அதன் பிறகு வலிமை இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது. தற்போது துணிவு திரைப்படம் இவ்விரண்டையும் பின்னுக்கு தள்ளி தற்போது முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

- Advertisement -

துணிவு திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 117 கோடி ரூபாயை வசூல் படைத்து இருக்கிறது. இதன் மூலம் இந்த படத்தில் தொடர்புடைய அனைத்து விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்திருக்கிறது. எனினும் இது வாரிசை விட தமிழகத்தில் 17 கோடி ரூபாய் குறைவான வசூலையே பெற்று இருக்கிறத.  இதைப் போன்று உலகம் முழுவதும் 193 கோடி வசூலை துணிவு திரைப்படம் பெற்று இருக்கிறது. இன்னும் 7 கோடி வசூல் செய்தால் 200 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த முதல் அஜித் திரைப்படம் என்ற பெருமையை துணிவு பெறும்.

- Advertisement -

மேலும் தமிழகத்தில் விசுவாசம் செய்த சாதனையை துணிவு முறியடிக்க இன்னும் ஏழு கோடி ரூபாய் தேவைப்படுகிறது. விஜய் படத்துடன் மோதாமல் இருந்திருந்தால் துணிவு திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனையை படைத்திருக்கும். இரண்டு படங்களும் போட்ட காசை எடுத்துவிட்டதால், இரண்டுமே வெற்றி திரைப்படம் தான்.

Most Popular