Friday, April 26, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாவிஜய்,சூர்யா,தனுஷ் 3 பேருமே இல்ல.. இண்ஸ்டாவில் கொடி கட்டி பறக்கும் நம்பர் 1 தமிழ் நடிகர்...

விஜய்,சூர்யா,தனுஷ் 3 பேருமே இல்ல.. இண்ஸ்டாவில் கொடி கட்டி பறக்கும் நம்பர் 1 தமிழ் நடிகர் யார் தெரியுமா?

ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் பிரபலங்கள் என்று அறியப்பட்டார்கள். ஆனால் தற்பொழுது இருக்கும் சோசியல் மீடியாக்களின் சாமானிய மனிதர்கள் கூட பிரபலங்கள் ஆகி விடுகிறார்கள். மிகப்பெரிய பங்கு வகிக்கும் சோசியல் மீடியா என்றால் அது இன்ஸ்டாகிராம் தான்.தன் தனிப்பட்ட திறமைகளை விரிசாக எடுத்து வீடியோ போஸ்ட் செய்து பலரும் பிரபலமாகி வருகிறார்கள் .

- Advertisement -

இந்த அடிப்படையில் இயங்கும் இன்ஸ்டாகிராமில் சாதாரண மக்கள் கூட மில்லியன் கணக்கில் பாலோவர் குறித்து வருகின்ற நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டில் instagramல் அதிக ஃபாலோவர்ஸ்களை பெற்றுள்ள டாப்பை நடிகர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

அந்த லிஸ்டில் முதலிடம் பிடித்திருப்பவர் எஸ் டி ஆர் இளம் வயதிலேயே நடிக்கும் திறன் படைத்த இவர். அதிகப் பெண் ரசிகர்களையும் இளைஞர்களையும் ரசிகர்களாக கொண்டவர். தற்பொழுது இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவில் எந்த திரைப்படமும் வெளியிடப்படவில்லை.

- Advertisement -

கடைசியாக அவர் நடித்த மாநாடும் திரைப்படம் அவருக்கு சினிமா வாழ்க்கைக்கு கொடுக்கச் செய்தது.அதை தொடர்ந்து தற்பொழுது இவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய 48வது திரைப்படத்தை நடித்துக் கொண்டு வரும் இந்த நிலையில் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 12.4 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள்.

- Advertisement -


தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களிலேயே இவருக்கு இத்தனை பாலோவர்ஸ் இருப்பதால் இவர் முதலிடத்தில் இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து இந்த பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்திருக்கும் நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக தற்பொழுது கலக்கிக் கொண்டிருக்கும் தளபதி விஜய் இதில் சுவாரசியம் என்னவென்றால் இவருக்கு கடைசியாக வெளிவந்திருக்கும் லியோ திரைப்படத்திலிருந்து தான். இவர் instagram அக்கவுண்ட்டை தொடர்ந்தார் தற்பொழுது இவருக்கு 10 மில்லியன் ஃபாலோவர்ஸ்கள் இருக்கிறார்கள்.

மிகக் குறுகிய நாட்களில் இந்த பட்டியலில் இரண்டாவது இடம் பிடிக்கும் அளவிற்கு இவர் வளர்ச்சி அடைந்திருக்கிறார் என்பது ரசிகர்கள் இவர் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்து கூடிய செயலாகும்.

இந்தப் பட்டியலில் மூன்றாவதாக இடம்பிடித்திருக்கும் நடிகர் சூர்யா ஆவார் இவர் ஜெய்பீம், சூரரைப் போற்றிப் போன்ற திரைப்படங்களின் மூலம் சினிமாவில் அசுர வளர்ச்சி அடைந்த இவர் கடைசியாக வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சற்று சறுகினார்.

அதை ஈடுகட்ட தற்பொழுது கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் பேஸ்புக் போன்ற சோசியல் மீடியாக்களில் எந்தவித முனைப்பும் காட்டாத சூர்யா தற்பொழுது instagramல் ஆக்டிவாக இருந்து வருகிறார் இதனால் இவருக்கு தற்பொழுது 8 . 2 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருந்து வருகிறார்கள்

தமிழைத் தொடர்ந்து தற்போது ஹிந்தியில் தன் திறமையை நிலைநாட்டி வரும் நடிகர் விஜய் சேதுபதி இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்திருக்கிறார். ஜவான் திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு தற்பொழுது ஹிந்தியில் பல ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

இவரை தமிழ் சினிமா மட்டுமே அறிந்திருந்த நிலையில் தற்பொழுது இந்திய சினிமா அனைத்தும் விஜய் சேதுபதியை அடையாளம் கண்டு கொண்டது அதனால் தற்பொழுது விஜய் சேதுபதிக்கு 7.9 மில்லியன் பாலோவர்ஸ் இருந்து வருகிறார்கள்

இந்தப் பட்டியலில் கடைசி இடத்தை இரண்டு நடிகர்கள் பகிர்ந்து இருக்கிறார்கள் இவர்கள் இருவரும் ஒரு காலத்தில் ஒரே திரைப்படத்தில் நண்பர்களாக நடித்திருக்கிறார்கள் அவர்கள் இப்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் தான் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.

சினிமாவை பொறுத்தவரை நடிகர் தனுஷிற்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் கோலிவுட் ,பாலிவுட் ,ஹாலிவுட் என்று எல்லா மொழிகளிலும் கலக்கி வரும் தனுஷ் இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.

அதேபோல் ஆரம்பத்தில் நடிகர் தனுஷிற்கு நண்பனாக மூன்று திரைப்படத்தின் மூலம் ஒரு துணை நடிகனாக சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் சிவகார்த்திகேயன் குறுகிய காலகட்டத்தில் சிறந்த வளர்ச்சி அடைந்து தற்பொழுது இருவருமே இன்ஸ்டாகிராமில் 6.7 மில்லியன் என்ற சமமான பாலோவர்ஸை கொண்டு இருக்கிறார்கள்.

Most Popular