Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாபிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சோகம்!-விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி!

பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சோகம்!-விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி!

தமிழ் சினிமாவில்  நடிகர் இசையமைப்பாளர்  தயாரிப்பாளர் என பல பரிணாமங்களில்  வலம் வருபவர் விஜய் ஆண்டனி . இவர் இசையை வைத்து காதலில் விழுந்தேன் என்ற படத்தில்  நாக்கு முக்க என்ற பாடலின் மூலம்  தமிழகமெங்கும் பிரபலமானவர் . தற்போது இவர் பிச்சைக்காரன் 2 படத்தை  நடித்து இயக்கி இசையமைத்து  அதன் மூலம் இயக்குனராகவும் அறிமுகம் ஆகிறார் .

- Advertisement -

இவரது நடிப்பு மற்றும் இசையில் வெளியான  பிச்சைக்காரன் படம்  மிகப்பெரிய வெற்றி பெற்றது . இந்தப் படத்தை சசி என்பவர் இயக்கி இருந்தார் . இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை  பிச்சைக்காரன் 2 என்ற பெயரில்  விஜய் ஆண்டனி  கதை திரைக்கதை எழுதி இயக்கி வந்தார் . இப்படத்தில் அவருடன்  ஜான் விஜய்  ஒய் ஜி மகேந்திரன்  யோகி பாபு   உள்ளிட்ட  பலரும்  நடித்து வந்தனர் .

இந்தப் படத்திற்கான படபிடிப்பானது  மலேசியாவில் நடைபெற்று வருகிறது . இதில் சண்டைக் காட்சிகள்  மலேசியாவில் உள்ள   லங்காவி  தீவில் வைத்து படமாக்கப்பட்டன. சண்டைக் காட்சிகளின் போது  எதிர்பாராத விதமாக ஏற்பட்ட  படகு விபத்தில்  படுகாயம் அடைந்தார் விஜய் ஆண்டனி .

- Advertisement -

இதனைத் தொடர்ந்து அவர் அந்த தீவில் உள்ள மருத்துவமனையில்  முதற்கட்ட சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டிருந்தார் . முதல் கட்ட சிகிச்சைகள் முடிந்து  மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த விஜய் ஆண்டனி  பின்னர் மேல் சிகிச்சைக்காக  மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள  மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் .

- Advertisement -

இந்த விபத்து செய்தியை அறிந்ததும்  சென்னையில் இருந்து அவரது குடும்பத்தினர்  மலேசியா சென்று  அவருடன் தங்கி இருந்து அவரை கண்காணித்து வருகின்றனர். காயத்திலிருந்து குணமாகி வரும் அவர்  வெகு விரைவில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள  தயாரிப்பாளர்  தனஞ்செயன்  விஜய் ஆண்டனி  வேகமாக குணமாகி வருகிறார் . அவரது குடும்பத்தினர் அவருடன் உள்ளனர் . தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார் . சீக்கிரமே அவர் சென்னை திரும்புவார் . விரைவில் குணமடைந்து மீண்டும்  அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள எல்லாரும் பிரார்த்தியுங்கள் என பதிவிட்டு இருக்கிறார்.

விஜய் ஆண்டனிக்கு ஏற்பட்ட இந்த விபத்தானது  தமிழ் சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . படத்தின் நாயகனே  டூப் இல்லாமல் நடித்து  உபத்துக்குள்ளானது அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது .

Most Popular