தளபதி விஜய் – வெங்கட் பிரபு காம்போவில் உருவாகி வரும் கோட் திரைப்படம் இறுதிக் கட்டப் பணிகளை எட்டியுள்ளது. அக்டோபர் மாதம் துவங்கிய படப்பிடிப்பு ஸ்காட்லாந்து, இலங்கை, ஹைதரபாத், திருவனந்தபுரம் என பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடந்தது.
கடைசி அட்டவணையை சென்னையில் மெட்ரோவில் எடுத்து வருகிறார்கள். அநேகமாக மாஸ்டர் படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் போல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் சில நாட்கள் முன்பு கோட் படத்தில் மகேந்திர சிங் தோனி நடிப்பதாக செய்திகள் பரவின.
உடனே அதனை சிலர் மறுத்தனர். ஆனால் தற்போது வந்துள்ள தகவல்கள் படி அது உண்மையாக அதிக வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முன்பு நடந்த ஷூட்டிங் இடம், வெளியான அப்டேட்ஸ் அனைத்தும் அதை உறுதிப்படுத்துகிறது. இது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்தில் தள்ளியுள்ளது, முக்கியமாக சி.எஸ்.கே – விஜய் ரசிகர்களை.
இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு தீவிர கிரிக்கெட் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர். மேலும் தோனி என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். அவரது இதற்கு முந்தைய படங்களான சென்னை – 28, மங்காத்தா, சரோஜா ஆகியவற்றில் கூட கிரிக்கெட் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. அதே பாதையில் கோட் படமும் இணைகிறது.
கோட் படத்தின் ஷூட்டிங் முதலில் சேப்பாக் மைதானத்தில் தான் நடைபெறவிருந்தது. ஐ.பி.எல் காரணங்களால் திருவனந்தபுரம் ஸ்டேடியதுக்கு மாற்றப்பட்டது. இதன் மூலம் க்ளைமாக்ஸ் காட்சியில் கிரிக்கெட் சம்மந்தபட்டது இருப்பதை உறுதி செய்தனர். அடுத்ததாக விசில் போடு எனும் முதல் பாடல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய இரண்டு வீரர்கள் இப்படத்தில் கவுரவ தோற்றம் அளிக்கவுள்ளனர். அவர்கள் யாரென்று ரகசியமாக வைத்துள்ளனர். அது நிச்சயமாக தோனி & ரெய்னா இருவர்களாகத் தான் இருக்கும் என கணிக்கப்படுகிறது. காரணம், இவர்கள் இருவரும் தான் சென்னை சூப்பர் அணியின் முகங்கள். டிரைலரில் கூட யார் அது எனக் காட்டாமல் நேரடியாக படத்தில் சர்ப்ரைஸ் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.