Tuesday, December 3, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமா" எப்படி இருக்க வேண்டிய நான் இப்படி ஆயிட்டேன்" - தவறவிட்ட வாய்ப்புகள் பற்றி வரலட்சுமி...

” எப்படி இருக்க வேண்டிய நான் இப்படி ஆயிட்டேன்” – தவறவிட்ட வாய்ப்புகள் பற்றி வரலட்சுமி சரத்குமார் ஓப்பன் டாக்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் . அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் . தனது தந்தை சரத்குமார் ஒரு நடிகராக இருந்தாலும் தன்னுடைய சொந்த முயற்சியால் சினிமா துறையில் கால் பதித்து வருகிறார் வரலட்சுமி . இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கொன்றால் பாவம் என்ற திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது . கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் வரலட்சுமி .

- Advertisement -

போடா போடி திரைப்படம் இவரது முதல் படமாக இருந்தாலும் அந்தத் திரைப்படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டினர் . நல்ல முயற்சியான ஒரு நடிகையாக இவர் நடித்திருந்தது அனைத்து ரசிகர்களிடமும் பாராட்டை பெற்றது இதனைத் தொடர்ந்து மலையாளம் கன்னடம் தெலுங்கு என பிறமொழி படங்களிலும் தன்னுடைய நடிப்பால் முத்திரை பதித்து வந்தார் வரலட்சுமி சரத்குமார் . மேலும் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவான தாரை தப்பட்டை என்ற திரைப்படம் இவரது நடிப்பை அடுத்த பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றது . அந்தத் திரைப்படத்திற்காக தனது உடலை வருத்தி கடின உழைப்பை கொடுத்து இவர் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

ஆனாலும் அந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை . வரலட்சுமி சரத்குமார் விஜய் சேதுபதி மாதவன் மற்றும் கதிர் ஆகியோர் நடித்திருந்தனர் அவர்களுடன் வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார் . இந்தத் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களாலும் சினிமா விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது . ஒரு துணிச்சல் ஆன பெண்மணியாக அந்த திரைப்படத்தில் நடித்திருப்பார் . திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிக்காமல் நல்ல கதை களத்தை தேடி அதனை தேர்வு செய்து நடித்து வருபவர் வரலட்சுமி சரத்குமார் .

- Advertisement -

இவர் 2008 ஆம் ஆண்டு போடா போடி திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஆனாலும் அந்த திரைப்படம் 2012 ஆம் ஆண்டு தான் வெளியானது . ஆனால் வரலட்சுமி சரத்குமார் 2003 ஆம் ஆண்டு சினிமாவில் நுழைவதற்கான வாய்ப்பு மிகப் பெரிய இயக்குனரின் மூலம் தேடி வந்திருக்கிறது . ஆனாலும் அந்த நேரங்களில் அவரது அப்பா சரத்குமார் தற்போது நடிக்க வேண்டாம் என்று சொல்லி மறுத்ததால் அந்த வாய்ப்புகள் கைவிட்டுப் போனதாக வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார் ஒரு லட்சுமி . சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் அவர் இதனைப் பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார் .

- Advertisement -

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக அமைந்த மூன்று திரைப்படங்களில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் தனது தந்தை யார் அந்த வாய்ப்புகள் பரிபோனதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார் . தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான சங்கரின் இயக்கத்தில் சித்தார்த் ஜெனிலியா பரத் நகுள் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் பாய்ஸ். இந்தத் திரைப்படம் இளைஞர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது . அந்தத் திரைப்படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது வரலட்சுமி சரத்குமார் . இயக்குனர் சங்கர் அவருக்காக போட்டோ சூட் நடத்தி டெஸ்ட் சூட் எல்லாம் முடிந்து படப்பிடிப்பு துவங்க இருந்த நேரத்தில் வரலட்சுமி சரத்குமாரின் தந்தை சரத்குமார் இப்போது நடிக்க வேண்டாம் என கூறி மறுத்துள்ளார் . இதன் காரணமாக அவர் பாய்ஸ் படத்தில் நடிக்க வேண்டிய வாய்ப்பு மிஸ் ஆகி இருக்கிறது . மேலும் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற காதல் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்க இருந்தது வரலட்சுமி சரத்குமார் . அந்த வாய்ப்பும் தனது தந்தையால் தான் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார் .

Most Popular