சினிமா

இப்படி நல்ல நல்ல காட்சிகளை எல்லாம் நீக்கி இருக்கீங்களே! சீக்கிரமா டைரக்டர் வெர்ஷன் வெளியிடுங்க !- வம்சி இடம் ரசிகர்கள் கோரிக்கை !

தற்போது வெளியாகி  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம்  வாரிசு . இந்தப் படத்தில் தளபதி விஜய்  ரஷ்மிகா மந்தனா  சரத்குமார் குஷ்பூ பிரகாஷ்ராஜ் யோகி பாபு  ஆகிய பலரும் நடித்திருக்கின்றனர்.

தெலுங்கு இயக்குனர் வம்சி அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம்  ஜனவரி 11ஆம் தேதி  வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குடும்ப ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள இந்த படம்  தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

Advertisement

அதிக அளவில் நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்ததால்  மிக நீண்ட திரைப்படமாக இந்த படமானது உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக இந்தப் படத்தின் காட்சிகள் இரண்டு மணி நேரத்திற்கு மேல்  படத்திலிருந்து நீக்கப்பட்டு இருக்கின்றன. தியேட்டர்களில்  பணத்தின் நேரத்தை கருத்தில் கொண்டு இந்த காட்சிகளை நீக்க வேண்டி இருந்ததாக எடிட்டர் பிரவீன் தெரிவித்திருந்தார்.

இது போன்ற காட்சிகளை நீக்கி இருப்பதால் படத்தின் சுவாரசியமும் குறைந்திருப்பதாக திரை விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர். இந்நிலையில் படத்தில் நீக்கப்பட்ட சில சுவாரசியமான காட்சிகளை மீண்டும் சேர்த்து  டைரக்டர் உடைய  முழு படத்தொகுப்பை வெளியிட வேண்டும் என டைரக்டர்  வம்சிக்கு  கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Advertisement

குறிப்பாக திரைப்படத்தில் வரும் பிரகாஷ்ராஜ் மற்றும் சரத்குமார் ஆகியோரின் பிளாஷ்பேக் கல்லூரி காட்சிகள்  சுவாரசியமாக படமாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் படத்தின் அளவு கருதி எடிட்டிங் இன் போது அந்த காட்சிகளை நீக்கி இருக்கிறார்கள். இதனால் படத்தின் ஓட்டத்தில் சிறிது சுவாரஸ்யம் குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த காட்சிகளை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

தளபதி விஜய் படத்தில் தனது தந்தையாக வரும் பிரகாஷ்ராஜுடன் அவருடைய அலுவலகத்தில் சந்தித்து  உரையாடும் ஒரு காரசாரமான காட்சியும் படத்திலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறது அந்தக் காட்சியும் படத்தில் இடம் பெற்றிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். மேலும் குஷ்புவின் 17 நிமிட காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. இது போன்ற காட்சி நீக்கங்கள்  படத்தின் கதை ஓட்டத்தை  எமோஷனலாக ரசிகர்களுடன்   ஒன்றிப்போவதை இன்னும் உணர்வு பூர்வமாக காட்சி அளிக்கக் கூடிய வகையில் இருக்கும் என்பதால்  அவற்றையும் சேர்க்க வேண்டும் என்று விமர்சகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். படத்தின் கிளைமாக்ஸ் இருக்கு பிறகு  சரத்குமார் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் உரையாடும் ஒரு காட்சி இருக்கிறார்கள் இது போன்ற காட்சிகள் படத்தை இணைக்கப்பட்டால் இன்னும் படம் ஃபேமிலி சென்டிமென்டை  ரசிகர்களுக்கு அளித்து  அவர்களை எமோஷனலாக கனெக்ட் செய்யும் இதனால் இந்த காட்சிகளை எல்லாம் இணைத்து எந்த காட்சிகளும் நீக்கப்படாத முழு நீள திரைப்படத்தை வெளியிட வேண்டுமென்று டைரக்டர் வம்சியிடம்  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top