சினிமா

சமூக வலைத்தளத்தில் கசியும் வாரிசு சண்டை காட்சிகள்.. படக்குழு அதிர்ச்சி

தமிழில் கார்த்திக் மற்றும் நாகர்ஜுனாவை வைத்து தோழா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வாம்சி இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். தளபதி 66 என்று சொல்லப்படும் வாரிசு திரைப்படத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 7 தேதி பூஜை செய்து திருமணத்திற்கான கடைபிடிப்பு நடந்து வருகிறது நடந்து வருகிறது.

Advertisement

இந்த நிலையில் ஏற்கனவே வாரிசு திரைப்படத்திற்கான பர்ஸ்டு லுக் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை தந்தது. வருகின்ற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த வாரிசு திரைப்படமானது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் உருவாக்கப்படுகிறது. பல சாதனைகளில் தமிழில் செய்து வரும் தளபதி விஜய் தற்பொழுது தெலுங்கு சினிமாவில் வசூல் படைப்பதற்காக தெலுங்கு சினிமாவிற்கு கால் எடுத்து வைக்கிறார்.

ஆனால் தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாடும் நாட்களில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மகா சங்கராந்தி என்று சொல்லப்படும் பண்டிகை நாள் என்பதால் தமிழில் வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது தெலுங்கில் வெளியிடுவது சற்று சிக்கலாகி வருகிறது. அன்றைய தினம் தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் ஆடி புருஷ் என்ற திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தெலுங்கில் கால் பதிக்க நினைக்கும் தளபதி விஜய்க்கு இது சவாலாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் தற்பொழுது வரும் திரைப்படங்களில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வரும் ராஷ்மிகா மந்தானா விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர்களோடு குஷ்பூ,பிரகாஷ் ராஜ், சரத்குமார்,சங்கீதா கிரீஸ் ,ஷியாம் , யோகி பாபு போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர்.

மேலும் வாரிசு திரைப்படத்திற்கான சூட்டிங் தற்பொழுது வெகு விரைவாக நடந்து வருகிறது. சூட்டிங்கில் சக ஊழியர்கள் நடிகை நடிகர்கள் உதவி இயக்குனர்கள் போன்ற அனைவருக்கும் செல்போன் உபயோகிப்பதற்கும் புகைப்படம் வீடியோ போன்றவை எடுப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் இருக்கும் ஒரு ஹார்பரில் வாரிசு திரைப்படத்திற்கான ஷூட்டிங் நடந்து வருகிறது. அதில் வரும் சண்டைக் காட்சியில் விஜய் நடித்து வருகிறார்.அந்த சண்டைக் காட்சியை யாரோ ஒரு மர்ம நபர் இத்தனை கட்டுப்பாடுகளை மீறியும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது இயக்குனர் தயாரிப்பாளர் போன்ற பட குழுவினர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்த நிலையில் தளபதியின் ரசிகர்கள் தளபதி நடிக்கும் வாரிசு திரைப்படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இவ்வாறாக வெளியிடப்படும் படப்பிடிப்புக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இவ்வாறு வெளியாகும் காட்சிகளால் பட குழுவினர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top