தளபதி விஜய் – வெங்கட் பிரபு காம்போவில் மிகச் சிறப்பாக உருவாகி வரும் திரைப்படம் கோட். இரு தினங்களுக்கு முன்னர் ஷூட்டிங் முடிந்துள்ளது. இதனை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரம் கோட் திரைப்படத்தின் ஷூட்டிங் துவங்கியது. ஸ்காட்லாந்து, சென்னை, ஹைதரபாத், இலங்கை, திருவனந்தபுரம் என பல்வேறு இடங்களில் ஷூட்டிங் பரபரப்பாக சென்றது. அடுத்ததாக படக்குழு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு உடனே சென்றுள்ளது.
இப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் வகையில் உருவாகுவதாக கடந்த ஆண்டு செய்திகள் வந்தன. அதற்க்கு ஏற்ப தான் சில புகைப்படங்களும் வந்துள்ளன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இரண்டு விஜய்கள் ஒன்றாக நடந்து வருவது போல அமைக்கப்பட்டு இருந்தது. இதனை வைத்து படத்தில் டபுள் ஆக்சன் என அனைவரும் நினைப்போம். ஆனால் அதில் ஒரு டுவிஸ்ட்.
அண்மையில் வந்தத் தகவலின் படி இப்படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். போஸ்டரில் வந்தது இரண்டு விஜய்கள், ஒன்று அப்பா விஜய் மற்றொன்று மகன் விஜய். அப்பா விஜய்க்கு ஜோடியாக ஸ்னேகாவும் மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாக்ஷி சவுத்ரி நடிக்கிறார்கள்.
மூன்றாவதாக விஜய் செய்யும் கதாபாத்திரம் மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருக்கின்றனர். நேரடியாக படத்தில் ஒரு ஆச்சர்யத்தைப் பார்வையாளர்களுக்கு கொடுக்க வேண்டுமென திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்கு முன்பு அப்பா, இரு மகன்கள் என மூன்று கதாபாத்திரங்களை விஜய் மெர்சல் படத்தில் செய்திருந்தார். அதன் பின்பு மீண்டும் அத்தகு ஒரு விஜய்யை நாம் கோட் படத்தில் காண்போம்.
அந்த மூன்றாவது விஜய் மிகவும் இளமையான விண்டேஜ் லுக் கொண்டவராக இருக்கும் கதாபாத்திரம் எனத் தெரிகிறது. காரணம் அண்மையில் டீ-ஏஜிங் தொழில் நுட்பத்தில் ஷூட்டிங் செய்வதற்காக விஜய் மற்றும் வெங்கட் பிரபு & கோ அமெரிக்காவின் பிரபல நிறுவனத்துக்கு சென்று இருந்தார்கள். பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அதன் புகைப்படமும் வெளியானது.
இந்தப் படத்தை எப்படியாவது பெரிய ஹிட்டாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாகயுள்ளார் வெங்கட் பிரபு. மூன்று விஜய், பெரிய நடிகர்கள் பட்டாளம் தவிர சிவகார்த்திகேயனும் இப்படத்தில் நடித்துள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் கவுரவ தோற்றம் அளிப்பார், அதற்கான ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.