Friday, October 25, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமா"30 வருடங்களுக்கு முன்பு வெளியான தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்...

“30 வருடங்களுக்கு முன்பு வெளியான தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு”? – விரைவில் வர இருக்கும் அதிகாரப்பூர் அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு. இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனான இவர் திரைப்பட நடிகராகவும் பின்னணி பாடகராகவும் இயக்குனராகவும் இருந்து வருகிறார். சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் சரோஜா, கோவா, மங்காத்தா என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. மேலும் இது சிம்புவுக்கு ஒரு ரீ என்ட்ரி திரைப்படமாகவும் அமைந்தது. தற்போது நாகா சைதன்யா நடிப்பில் கஸ்டடி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்தில் நாகா சைதன்யாவுடன் அரவிந்த்சாமி மற்றும் கீர்த்தி செட்டி ஆகியோர் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் கூட திரைப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

- Advertisement -

1989 ஆம் ஆண்டு இவரது தந்தை இயக்கத்தில் உருவாகி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது கரகாட்டக்காரன். இந்தத் திரைப்படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், வினு சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் திரைப்படத்திற்கு அவரது சகோதரர் இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படமும் இந்த திரைப்படத்தின் பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்தத் திரைப்படம் அந்தக் காலகட்டத்திலேயே 425 நாட்கள் தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த திரைப்படத்தின் பார்ட் 2 எடுப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கைவிலேயே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரகாட்டக்காரன் திரைப்படத்தின் இயக்குனரான கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு தான் கரகாட்டக்காரன் பார்ட் 2 திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். இதற்கு முன்பு கூட கரகாட்டக்காரன் பார்ட் 2 திரைப்படம் எடுக்கப்படயிருப்பதாக பேச்சுவார்த்தைகள் எழுந்தன. அதில் ராமராஜன் அப்பாவாக நடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று கூறியதால் அந்த பேச்சு வார்த்தைகள் நடக்காமல் போனது.

- Advertisement -

அப்போது இதனைப் பற்றிய ஒரு பேட்டியில் வெங்கட் பிரபு கூறியிருக்கிறார். இந்தப் படத்தின் கதை தொடர்பாக தனது தந்தையிடம் பேசி அனுமதி வாங்கியதாக தெரிவித்த அவர் ராமராஜன் நடித்த கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவா நடிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் ராமராஜனை தவிர அந்த கதாபாத்திரத்தில் வேறு யாராலும் சிறப்பாக நடிக்க முடியாது எனக் கூறிய அவர் சிவா நடிக்கவில்லை என்றால் அந்த கதாபாத்திரம் நிச்சயமாக சிறப்பாக வராது எனவும் தெரிவித்தார். அதனால் அந்த திரைப்படத்தில் மிர்ச்சி சிவா கண்டிப்பாக நடிப்பார் எனவும் கூறினார்.

- Advertisement -

மேலும் கரகாட்டக்காரன் பார்ட் 2 பற்றி அந்த விழா மேடையில் பேசிய வெங்கட் பிரபு கரகாட்டக்காரன் நடித்த ராமராஜன், கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோரும் கெஸ்ட் ரோலில் நடிக்கயிருப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இத்திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வெளி வந்தால் தற்காலத்திற்கு ஏற்ற மாதிரி அந்தத் திரைப்படம் நிச்சயமாக மிகப் பெரிய வெற்றியடையும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Most Popular