Wednesday, July 24, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாவிஜய் பட வில்லனுடன் சிவகார்த்திகேயன்.. துப்பாக்கி போலவே ஒரு படம்.. முருகதாஸ் திட்டம் பலிக்குமா ?

விஜய் பட வில்லனுடன் சிவகார்த்திகேயன்.. துப்பாக்கி போலவே ஒரு படம்.. முருகதாஸ் திட்டம் பலிக்குமா ?

கோலிவுட்டில் சிவகார்த்திகேயன் ஒவ்வொரு படத்தின் மூலமும் அடுத்தக் கட்டத்தை எட்டி வருகிறார். தற்போது அவர் இரண்டு பெரிய படங்களில் மாறி மாறி நடித்துக் கொண்டுள்ளார். இரண்டுமே பார்வையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

- Advertisement -

கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் மேஜர் முகுந்தன் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டு இருக்கிறார். அமரன் படத்தின் ஷூட்டிங் அண்மையில் முடிந்து போஸ்ட் புரொடக்ஷனுக்கு நகர்ந்துள்ளது. உடனே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தன் அடுத்தப் படத்தின் ஷூட்டிங்கிக்கு சென்றுவிட்டார் சிவகார்த்திகேயன்.

அமரன் படத்தின் ஷூட்டிங் கடைசிக் கட்டத்தில் இருக்கும் போதே ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை துவங்கிவிட்டனர். முதல் அட்டவணையை முடித்துவிட்டு அமரன் படத்திற்கு சென்று, மீதம் இருக்கும் காட்சிகளில் நடித்துவிட்டு மீண்டும் திரும்பியுள்ளார். தற்போது முருகதாஸ் படத்தின் இரண்டாவது அட்டவணை (55 நாட்கள்) நடந்துக் கொண்டுள்ளது.

- Advertisement -

சிவகார்த்திகேயன் அவர்களுக்கு ஜோடியாக இப்படத்தில் ருக்மிணி வசந்த நடிக்கிறார். இந்த அறிவிப்பு படம் துவங்கும் முன்பே வெளியானது. இன்று மாலை படத்தின் மற்றொரு பெரிய ஸ்டாரை அறிவித்தது. தமிழில் விஜய், அஜித், சூர்யா என மூன்று பெரிய நடிகர்களுடன் துப்பாக்கி, பில்லா 2, அஞ்சான் ஆகிய படங்களில் நடித்த வித்யூத் ஜாம்வால் தற்போது சிவகார்த்திகேயனுக்கு எதிராக நடிக்கிறார்.

- Advertisement -

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தில் இவர் கோலிவுட்டுக்கு அறிமுகமானார். வில்லனாக அப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார், படமும்  பிளாக்பஸ்ட்டர். தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் நடிக்கிறார். இன்று மாலை இதன் அறிவிப்பு வந்தது.

இவரின் வருகை படத்துக்கு ஒரு வலுவை சேர்த்துள்ளது என்றே சொல்லாம். மேலும் முருகதாஸ் அவர்களுடன் மீண்டும் இணைய, படமும் துப்பாக்கி போன்ற களம் கொண்டது என்பதால் நிச்சயம் இப்படத்தை எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புகள் உள்ளது. 

Most Popular