சினிமா

ரசிகர்களின் மேல் பழி போடும் விக்னேஷ் சிவன் இதெல்லாம் நியாயமா?

தமிழகத்தின் லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா, விக்கி என்று அழைக்கப்படும்  இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததை இருவரும் இன்ஸ்ட்டாவிலும் பத்திரிக்கையாளர்களுக்கும் தெரியப்படுத்திக் கொண்டு காதலைக் கொண்டாடிக் கொண்டிருந்த சென்சேஷன் கப்பில் என்று கூறப்பட்டார்கள். கடந்த ஜூன் மாதம் திருப்பதியில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு  வாடகைத் தாய் முறையில் இரட்டை குழந்தை பிறந்ததை அவர்களின் இன்ஸ்ட்டா பக்கத்தில் தெரிவிக்க அது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நேற்று  நயன்தாரா நடிப்பில்  அஸ்வின் சரவணன் இயக்கத்தில் விக்னேஷ் சிவனின் தயாரிப்பில் உருவான  கனெக்ட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நயன்தாரா நடித்த படம் ரிலீஸ் ஆவதால்  ரசிகர்களிடம் பெரும் உற்சாகம் காணப்பட்டது. இந்தப் படமானது  தமிழில்  பல தரமான திகில் படங்களை இயக்கிய  அஸ்வின் சரவணன் இயக்கத்தில்  உருவானது.

Advertisement

இதற்கு முன் இவர்  நடிகை தப்ஸியை வைத்து இயக்கிய  ‘கேம் ஓவர்’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இதனால் இந்த படத்திற்கும் ரசிகர்களிடம்  எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் பாலிவுட்  குணச்சித்திர நடிகர்  அனுப்பும் கீறும் நடித்திருந்தார். இவ்வாறு பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே  வெளியான வந்த படமானது  ரசிகர்களிடமும் சினிமா விமர்சகர்களிடமும்  கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது.

திரைப்பட விமர்சேகர்கள் மிகவும் கடுமையாக இந்த படத்தையும் விமர்சித்து வருகின்றனர் சமூக வலைதளங்களில். இதனால் பட குழுவினர் மிகவும் மன வருத்தத்தில் உள்ளனர்.

Advertisement

இந்தப் படத்தைப் பற்றி பதிவிட்டுள்ள சில  சமூக வலைதள சினிமா விமர்சகர்கள்  இந்தப் படமானது 1940 களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய படம் என்று  விமர்சித்துள்ளனர் . மேலும் சிலர்  இரண்டு நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப் படங்களுக்கான கதையை வைத்து  இரண்டு மணி நேரம் முழு நீள சினிமா படத்தை எடுத்து  மக்களை வன்கொடுமை செய்கின்றனர் என்றும்   விமர்சனங்களை    கொடுத்துள்ளனர்.

இப்படி மோசமான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்த வேலையில்  பிரபல  டிஜிட்டல்  திரைப்பட போஸ்டர் வடிவமைப்பாளரான  ஜி பாலாஜி அவர்கள்  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்  இந்தப் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார் . இந்தப் பதிவில் அவர்  தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஒரு  திகில் படம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்தை தயாரித்ததற்காக நான் விக்னேஷ் சிவனை மனதார பாராட்டுகிறேன் என்றும் கூறியிருக்கிறார் அந்த பதிவில் .

இந்தப் பதிவானது மிகவும் மன உளைச்சலில் இருந்த படக் குழுவினருக்கும்  தயாரிப்பாளர் விக்னேஷ்  சிவனுக்கும்  மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது. பாலாஜி அவர்களின் பதிவை ரீட்வீட் செய்துள்ள  விக்னேஷ் சிவன் ” வன்மம் நிறைந்த பொய்யான  பதிவுகளும்  விமர்சனங்களும்  வருகின்ற நேரத்தில்  உங்களைப் போன்றவர்களின் பாராட்டும்  நியாயமான விமர்சனங்களும் எங்களை வன்மம் நிறைந்தவர்களிடமிருந்து  பாதுகாக்கின்றன மற்றும் தரமான  வித்தியாசமான படைப்புகளை தருவதற்கு  தூண்டுகின்றன . உங்களது நியாயமான விமர்சனத்திற்கு நன்றி என்று  மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement

தற்போது சமூக ஊடகங்கள் முக்கிய ஊடகங்களாக மாறி உள்ள இந்த காலத்தில்  அவர்களின் விமர்சனங்களின் மூலமே  ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடிகிறது . பெரும்பாலான சினிமா விமர்சனங்கள்  நியாயமானதாகவே இருந்தாலும்  சிலர் வேண்டுமென்று  வன்மம் நிறைந்த விமர்சனங்களை வழங்குகிறார்கள் என்பது  மறுக்க முடியாத உண்மை தான்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top