Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் 67 அப்டேட்: கதைக்கு வலுசேர்க்க இணையும் முக்கிய புள்ளி! தளபதி விஜய்க்கு படுமாஸான ரோல்!

விஜய் 67 அப்டேட்: கதைக்கு வலுசேர்க்க இணையும் முக்கிய புள்ளி! தளபதி விஜய்க்கு படுமாஸான ரோல்!

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் “மாஸ்டர் “படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மீண்டும் நடிகர் விஜய் உடன் தளபதி 67 படத்தில் இணைவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் மன்சூர் அலிகான் மீது தனது விருப்பத்தை அடிக்கடி வெளிப்படுத்தும் லோகேஷ், தற்போது தனது அடுத்த படத்தில் அவருக்காக ஒரு கதாபாத்திரத்தை எழுதியுள்ளதாக தெரிவித்திருந்தார். மன்சூர் அலிகான் உடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாகவும் அவருக்கான சிறந்த கதாபாத்திரத்தை தான் எழுதியுள்ளதாகவும் கூறினார்.

நடிகர் விஜய் நடித்துவரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இது தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும். இதனை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இதற்கிடையே லோகேஷ்-விஜய் காம்போவின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு எப்போது வரும் என்கிற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

- Advertisement -

விஜய் 67ல் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்க உள்ளதாகவும் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இதில் அவர் நெகட்டிவ் ரோலில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் ‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் டைரக்டர் தீரஜ் வைதி விஜய் 67ல் இணைகதாசிரியராக பணியாற்ற உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் விஜய் 67 படத்தின் டைட்டில் ‘ராய்சே’ எனவும் இதில் விஜய் கேங்ஸ்டர் ஆக வருவார் என்பதையும், இப்படம் மும்பையில் படமாக்கப்பட உள்ளதாக பல முக்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. மும்பையில் எடுக்கப்படும் படங்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியும் பெரும் என ரசிகர்களுக்கிடையே ஒரு நம்பிக்கை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular