Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாவிடுதலை 2 வில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி மகன்!

விடுதலை 2 வில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி மகன்!

- Advertisement -

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் விடுதலை. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் பாகம் தமிழகத்தில் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் வசூலை படைத்தது.

தற்போது இரண்டாவது பாகம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

விஜய் சேதுபதியின் சிறிய வயது கேரக்டராக சூர்யா காட்சியளிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வெற்றிமாறனின் பணிகளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று தன்னுடைய குழந்தைகளை படத்தளத்திற்கு விஜய் சேதுபதி அழைத்து வந்ததாக அவரே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது தான் தன்னுடைய மகனை நடிக்க வைப்பதற்காக தான் இந்த பணியை அவர் செய்து இருக்கிறார் என்று தெரிகிறது. பல முன்னணி நடிகர்கள் தங்களுடைய குழந்தைகளை சினிமாவில் நடிக்க வைத்து வந்தனர். இந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியும் இணைந்து இருக்கிறார்.

விஜய் சேதுபதி மகனுக்கு வெற்றிமாறன் காட்சிகளை எடுத்துக் கூறும் புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. விடுதலை முதல் பாகம் நல்ல வசூலை குவித்த நிலையில் தற்போது இரண்டாவது பாகமும் பெரிய அளவில் பேசப்படும் என கூறப்படுகிறது. யாருக்கு தெரியும் இந்த படம் மூலம் விஜய் சேதுபதி மகனான சூர்யாவும் திரைப்பட நட்சத்திரமாக பிற்காலத்தில் உயரலாம்.

Most Popular