சினிமா

பிரபல பேய் சீரியஸில் களம் இறங்குகிறார் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவில் இயக்குனரும் மற்றும் நடிகருமான சுந்தர் சி  பிரபல தமிழ் சினிமா இயக்குனர்  மணிவண்ணன் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம்  இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். உள்ளத்தை அள்ளித்தா  அருணாச்சலம்  மற்றும் அன்பே சிவம்  ஆகிய திரைப்படங்கள் இவரது இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஆகும். இவை தவிர மேட்டுக்குடி வின்னர் கலகலப்பு  போன்ற பல நகைச்சுவை திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார்.

இவர் அரண்மனை என்ற  திகிலூட்டும் பேய் படத்தை  நகைச்சுவையுடன் கலந்து அதில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். அந்தப் படமானது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து  அரண்மனையின் அடுத்தடுத்து இரண்டு பாகங்களையும் இயக்கினார். எல்லா பாகங்களிலும் கதையின் மைய புள்ளியானது அரண்மனையிலேயே இருக்கும் .

Advertisement

2014ஆம் ஆண்டு வெளியான அரண்மனை முதல் பாகத்தில்  சுந்தர் சி ஹன்சிகா மோட்வானி  ஆண்ட்ரியா லட்சுமி ராய்  சந்தானம் வினை மற்றும்  கோவை சரளா ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படமானது நகைச்சுவையுடன்  திகிலூட்டும் பேய் கதையாக  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து  இதன் இரண்டாம் பாகம்  2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது  இதிலும் சுந்தர் சி மற்றும்  ஹன்சிகா ஆகியோர் நடித்திருந்தனர் ஆன்ட்ரியா மற்றும் லட்சுமி ராய்க்கு பதிலாக  திரிஷா மற்றும் பூனம் பஜ்வா ஆகியோர் இந்தப் படத்தில்  இணைந்தனர்  இந்தப் படமும் ஒரு வெற்றி கூட்டணியாக அமைந்தது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக பணம் வந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவர் சமீபகாலமாக  முக்கிய ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வந்தார்  மேலும் ஹிந்தியிலும் கவனம் செலுத்தி வந்தார். இவரது நடிப்பில் உருவாகியிருக்கும்  பார்சி என்ற வெப் சீரிஸ்  பிப்ரவரி 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் என் இயக்கத்தில்  சூரிய கதாநாயகனாக நடிக்கும்  விடுதலை படமும் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. இந்நிலையில்  விஜய் சேதுபதி  தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடிய பேய் பட சீரியல்  நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

ஆர்யா ராசி கண்ணா மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான அரண்மனையின் மூன்றாம் பாகமும் கமர்ஷியலாக பெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் நான்காம் பாகத்தை இயக்க முடிவு செய்து இருக்கிறார் சுந்தர் சி. இந்தத் திரைப்படத்தில் முதலாவதாக  சுந்தர்சியுடன் இணைய இருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இந்த திரைப்படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகளை  துவக்கியுள்ள சுந்தர் சி  விஜய் சேதுபதியுடன் பேசி அரண்மனை 4 படத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இதனைப் பற்றிய  அதிகாரப்பூர்வ அறிவிப்பு  விரைவில் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top