Saturday, October 5, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமா200.. 1000 கோடியா.. என்னங்க சொல்றீங்க.. நான் சம்பளம் வாங்காம நடிக்கிறேன் - விஜய் சேதுபதி...

200.. 1000 கோடியா.. என்னங்க சொல்றீங்க.. நான் சம்பளம் வாங்காம நடிக்கிறேன் – விஜய் சேதுபதி எமோஷனல் பேச்சு.. !

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சினிமாவில் தன் 50 படங்களைக் கடந்துள்ளேர். இதனை பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகிறார்கள். அப்படம் இன்று உலகெங்கும் வெளியாகியுள்ளது. நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா என்ற படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

- Advertisement -

2017ஆம் ஆண்டு குரங்கு பொம்மை எனும் தரமான த்ரில்லர் படத்தைக் கொடுத்தவர் இந்த இயக்குனர். அதன் பின்னர் இப்போது தான் தன் இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார். சினிமா வட்டாரங்களில் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தைப் பார்த்தார்கள் மிகவும் மிரண்டு போய் உள்ளார்கள். படம் அந்த அளவுக்கு சிறப்பாக உள்ளதாகம். அண்மையில் வெளியான டிரைலரும் நம்பிக்கை அளிக்கிறது.

மேலும் மகாராஜா படத்தின் மேல் நடிகர் விஜய் சேதுபதியே மிகப் பெரிய எதிர்பார்ப்பு வைத்துள்ளார். இது அவரது 50வது படம் என்பதால் புர்ஜ் கலீஃபாவில் 3 நிமிடத்துக்கு 75 லட்சம் செலவிட்டு விளம்பரம் செய்துள்ளனர். அதோடு இல்லாமல் பல நகரங்களுக்கு சென்று புரொமோஷன் செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியின் செய்தியாளர்கள் சந்திப்பில் ஓர் கேள்விக்கு விஜய் சேதுபதி சற்று எமோஷனல் ஆகி பளிச்சென்று பதிலளித்துள்ளார்.

- Advertisement -

கூட்டத்தில் செய்தியாளர் ஒருவர், ” நீங்க ஏற்கனவே 200 கோடி, 1000 கோடி வெற்றியைப் பார்த்துவுட்டீர்கள் ” என கூறியுள்ளார். அதற்க்கு விஜய் சேதுபதி உடனே, ” நீங்க சொல்ற 200 கோடி, 1000 கோடிலாம் நான் பார்க்கவில்லை, தயாரிப்பாளருக்கு அதெல்லாம் சொந்தம். நான் இங்கு பல படங்களுக்கு அட்வான்ஸ் மட்டுமே வாங்கிக் கொண்டு மீதி சம்பளம் வாங்காமல் நடித்துக் கொண்டுள்ளேன். காரணம் பல தயாரிப்பாளர்கள் படத்தை எடுக்கவா சிரமப்படுவதைப் பார்க்கையில் கஷ்டமாக உள்ளது. ” என சற்று எமோஷனலாக பேசினார்.

- Advertisement -

விஜய் சேதுபதி நடிப்பில் கடைசி விவசாயி, மாமனிதன் ஆகியப் படங்கள் சிறப்பாக இருந்தாலும் நல்ல வசூலை ஈட்டாதது அவருக்கு ஒரு கவலையாக இருந்தததை இதற்கு முன்பே பல முறை அவர் தெரிவித்துள்ளார். இதனை மனதில் வைத்துக் கொண்டு அவர் அப்படி பேசியுள்ளார் எனத் தோன்றுகிறது. விஜய் சேதுபதி தமிழில் மிகச் சிறப்பான படம் கொடுத்து பல ஆண்டுகள் ஆனது போல இருக்கிறது, அவருக்கு இப்படம் ஒரு திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

Most Popular