Friday, December 6, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாமாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த பின்பும் சம்பளத்தைப் பாதியாக குறைத்த விஜய் சேதுபதி.. காரணம் இதுதான்.....

மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த பின்பும் சம்பளத்தைப் பாதியாக குறைத்த விஜய் சேதுபதி.. காரணம் இதுதான்.. !

சீனாவில் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா எனும் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும் வசூலையும் அள்ளி வருகிறது. நித்திலனின் முதல் படம், குரங்கு பொம்மை சாயலில் தான் மகாராஜா படமும் அமைந்தது.

- Advertisement -

முதல் வார வசூலில் 60 கோடிகள் தாண்டியது. மொத்த ஓட்டத்தில் நிச்சயம் 100 கோடிகளை விட அதிகமாக வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி சற்று எமோஷனலாக பேசினார். இதற்கு முன் கொடுத்த ஃப்ளாப் படங்களுக்கு இது சரியான பதிலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் வில்லனாக நடித்து மற்றப் படங்கள் வெற்றியைச் சந்தித்து இருந்தாலும் அவர் ஹீரோவாக நடித்துள்ள வெற்றித் திரைப்படம் மகாராஜா அவருக்கு பெரிய ஊக்கம். இனிமேல் அவர் வில்லனாக எந்தப் படமும் செய்யாமல் கதாநாயகனாக மட்டுமே தொடரவுள்ளதாக கூறியுள்ளார்.

- Advertisement -

பொதுவாக ஒரு வெற்றிப் படம் கொடுத்தால் கதாநாயகனோ இயக்குனரோ யாராக இருந்தாலும் சம்பளத்தை உயர்துவதே வழக்கம். ஆனால் விஜய் சேதுபதி அவர்கள் இத்தகு பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்த போதிலும் அதனைச் செய்யவில்லை. மாறாக அவர் தன் சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளார். இது தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபம்.

- Advertisement -

விஜய் சேதுபதி அவர்கள் அடுத்ததாக சத்யஜோதி தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு அவரது சம்பளம் 10 கோடிகள். இதற்கு முன்னர் 17, 20 கோடிகள் என வாங்கினார். இந்த சம்பள குறைப்புக்கு மற்றொரு காரணம் அவரது முந்தைய படங்கள் பெரும்பாலாக வெற்றியைச் சந்திக்கவில்லை. மேலும் சம்பளத்தைக் குறைப்பதால் தனது தயாரிப்பாளர் லாபம் அடைவார் என்பதாலும் அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.

ஏற்கனவே தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டம் கூடி, இனிமேல் பெரிய ஹீரோக்கள் சம்பளத்தை குறைத்தால் மட்டுமே படம் தயாரிப்போம் எனும் முடிவுக்கு வந்துள்ளனர். இந்த சமயத்தில் விஜய் சேதுபதி தானாக முன்வந்து இவ்வாறு செய்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. அதே சமயம் இந்த தயாரிப்பாளர்கள் கூட்டம் மற்ற ஹீரோக்களின் மனதை எந்த விதத்திலும் மாற்றாது. பெரிய சம்பளத்துக்காக பிற மாநில தயாரிப்பு நிறுவனங்களுக்கு அவர்கள் படம் செய்துக் கொண்டுள்ளார்கள்.

Most Popular