சினிமா

விஜயகாந்த் மாதிரி ஒரு சிறந்த மனிதரை பார்க்க முடியாது- கண் கலங்கிய பிரபுதேவா

தமிழ் சினிமாவில் நடன உதவி இயக்குனராக அறிமுகமாகி பிறகு நடன கலைஞராக உருவெடுத்து பின்னர் ஹீரோ இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்தவர் பிரபுதேவா. தற்போது கூட பகிரா என்ற படத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

Advertisement

தற்போது படத்தை இயக்குவது நடிப்பதும் என பிரபு தேவா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் பிரபுதேவா பேட்டி ஒன்றில் நடிகர் விஜயகாந்தை வெகுவாக பாராட்டி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் தம் நடித்ததில் எனக்கு மிகவும் சிறந்த பிடித்த படம் என்றால் அது வானத்தைப்போல தான். வானத்தைப்போலவில் அண்ணன் தம்பி பாசம் அவ்வளவு உணர்ச்சிபூர்வமாக காட்டப்பட்டிருக்கும்.

அதில் விஜயகாந்த் அண்ணனுக்கு நான் தம்பியாக நடித்தது பெருமை கொள்கிறேன். எனக்கு தோன்றும் போதெல்லாம் வானத்தைப் போல படத்தை தான் பார்ப்பேன். விஜயகாந்த் போல் ஒரு நடிகரையும் மனிதரையும் பார்க்கவே முடியாது. இனி அப்படி ஒரு மனிதர் பிறந்து வர வாய்ப்பு இல்லை. ஒரு மனிதன் இப்படி எல்லாம் நல்லவராக இருக்க முடியுமா என்பதற்கு எடுத்துக்காட்டு விஜயகாந்த் தான்.

Advertisement

இயக்குனர்களின் நடிகராக விஜயகாந்த் எப்போதுமே இருப்பார். நடனப் பயிற்சியின் போது தாம் ஏதேனும் கேட்டால் அதற்கு முழு ஒத்துழைப்பையும் கொடுப்பார். நான் பணிபுரிந்ததிலே சிறந்தவர் என்றால் அது விஜயகாந்த் தான். அவருடன் பணியாற்றிய காலத்தை என்னால் மறக்க முடியாது என்றும் பிரபுதேவா கூறியிருக்கிறார்.

இதேபோன்று நடிகர் பிரபு, சரத்குமார் போன்றவர் மீது தான் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் இன்று வரை அது தொடர்வதாகவும் கூறியுள்ளார். தம் சிறுவயதிலிருந்து சிரஞ்சீவியை பார்த்து வருவதால், அவரும் என்னை அப்படியே தான் இன்று வரை பார்ப்பதாக கூறியுள்ளார். நான் இன்று பெரிய அளவில் வளர்ந்து இருந்தாலும் அனைத்து பிரபலங்களுடன் பழகும் போது என் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த போது எப்படி இருந்தேனோ அதேபோல் தான் இன்றுவரையும் இருக்கிறேன் என்று பிரபுதேவா கூறியிருக்கிறார்.

தாம் நடிக்கும் போதும் நான் கையாட்டும் முறை ரஜினியின் சா இருப்பதாக பலரும் கூறுவதாக குறிப்பிட்டுள்ள பிரபுதேவா தம் நடன கலைஞர் என்பதால் அது இயல்பாகவே வந்திருக்கும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top