Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாவிருமன் டிரைலர் எப்போது? வீடியோ வெளியிட்ட படக்குழு

விருமன் டிரைலர் எப்போது? வீடியோ வெளியிட்ட படக்குழு

- Advertisement -

கார்த்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள திரைப்படம் விருமன்.இந்த படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வரும் 12ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த கோப்ரா திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் விருமன் திரைப்படம் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி நீண்ட நாட்களுக்கு பிறகு கிராமத்து சப்ஜெக்டில் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக இந்த படத்தின் மூலம் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிரடி சங்கர் அறிமுகம் ஆகிறார். கார்த்தியுடன் கொம்பன் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் முத்தையா இரண்டாவது முறையாக விருமன் திரைப்படம் மூலம் இணைந்துள்ளனர். படம் ரிலீஸ் ஆக இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ட்ரைலர் இதுவரை வெளி ஆகவில்லை. இதனால் கார்த்தி ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தனர்.

- Advertisement -

தற்போது அவர்களுக்கு பட குழு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் தேதி வெளியாகும் நாள் குறித்து ஒரு பாடலின் ப்ரோமோ மூலம் படக் குழு வெளியிட்டுள்ளது. மதுரை வீரன் பாடலின் வீடியோ புரோமோவை பட குழு வெளியிட்டுள்ளது. அதில் அதிதி சங்கர் பக்கத்து வீட்டுப் பெண் போல தோற்றமளித்து அழகாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.

- Advertisement -

எப்போதும் போல் கார்த்திக்கு அதித்தி ஜோடியும் கச்சிதமாக பொருந்தி உள்ளது. மதுரை வீரன் பாடலும் மெல்லிசை கலந்து கிராமப்புற கதைக்கு ஏற்றவாறு உள்ளது. வீடியோவின் முடிவில் விருமன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை நாளை (ஆகஸ்ட் 3) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .இதனால் கார்த்தி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த ஒரு மாதமாக எவ்வித பெரிய ஹீரோக்களின் படம் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் விருமன் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அனைத்து முன்னணி திரையரங்குகளும் விருமன் திரைப்படத்தை திரையிடுவதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Most Popular