சினிமா

விசாலா இது.. மிரட்டும் பர்ஸ்ட் லுக் வெளியீடு.. எத்தனை கேரக்டர் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் ரசிகர்களால் ஆக்சன் ஹீரோ என்றும் கொண்டாடப்பட்டு வருகிறார்.இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் இவர் நடித்த சண்டக்கோழி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் சண்டக்கோழி 2 என்று அடுத்த பாகத்திலும் கதாநாயகராக நடித்தார். இவர் அயோக்கிய ,ஆக்சன், எனிமி என்ற தொடர்ந்து பல சுமார் படங்களை கொடுத்தார்.

மேலும் விஷால் லத்தி மார்க் ஆண்டனி என்ற திரைப்படங்களை நடித்து வருகிறார் . இதைத் தொடர்ந்து தற்பொழுது விஷாலினுடைய 45 வது பிறந்த நாளை முன்னிட்டு விஷால் நடித்த மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் பாஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.சண்டக்கோழி திரைப்படத்திலிருந்து தற்பொழுது வெளியான சண்டக்கோழி 2 திரைப்படம் ஒரு பட அனைத்திலுமே விஷால் அன்று பார்த்தது போன்றே இன்றும் அதே தோற்றத்தோடு படம் நடித்து வருகின்ற நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் மார்க் ஆண்டனி ஃபர்ஸ்ட் லுக்கில் முற்றிலும் வித்தியாசமான ஒரு தோற்றத்தில் காணப்படுகிறார்.

மேலும் இதை பார்ப்பதற்கு சற்று புஷ்பா திரைப்படத்தில் வரும் அல்லு அர்ஜுனை போலவும் தோன்றுகிறது. அடர்த்தியான முடி அடர்த்தியான தாடி ,கையில் துப்பாக்கி நெத்தியில் திருநீர் என்று ஒரு கேங் லீடரைப் போன்ற தோற்றத்தில் காணப்படுகிறார். இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற ஒரு காதல் கதை கலங்களை கொண்ட திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். மேலும் இந்த திரைப்படங்களும் ரசிகர்களிடையே சற்று கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த நிலையில் தற்பொழுது விஷால் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு முற்றிலும் புதுமையான கதைக்களத்தை கொண்டது என்பதை இந்த ஃபர்ஸ்ட் லுக் நமக்கு கூறுகிறது.

இந்த திரைப்படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்திருக்கிறார். மேலும் இவர் ஒரு நேர்காணலின்போது மார்த்தாண்டனி திரைப்படத்தில் ஹீரோவான விஷாலும் வில்லனான நானும் இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறோம் என்று கூறியிருந்தால் இதைத்தொடர்ந்து இப்பொழுது வெளியான இந்த ஃபாஸ்ட் லுக் இருக்கும் விஷால் ஒரு கதாபாத்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சேமிக்கிறார் இவர் விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்திற்கு ஹீரோவாகவும் அதே திரைப்படத்திற்கு இசையமைப்பாளராகவும் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top