Friday, May 3, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணையும் ராட்சசன் கூட்டணி.. 2வது பாகம் வருகிறதா?

மீண்டும் இணையும் ராட்சசன் கூட்டணி.. 2வது பாகம் வருகிறதா?

கிரிக்கெட் வீரராக தனது வாழ்க்கையை தொடங்கி நடிகராக பிரபலம் அடைந்தவர் விஷ்ணு விஷால். வாழ்க்கையில் பல உச்சங்களையும் தடைகளையும் தாண்டி தற்போது தனக்கென ஒரு இடத்தை சினிமாவை பிடித்திருக்கிறார்.

- Advertisement -

நட்பு, துரோகம், திருமண முறிவு போதை, மது அனைத்தையும் கடந்து அதிலிருந்து மீண்டு வெற்றி பெற முடியும் என்று ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் காட்டி இருக்கிறார். முதல் மனைவியுடன் ஏற்பட்ட விவாகரத்து காரணமாக பல்வேறு போதை பழக்கத்திற்கு ஆளாகி தற்போது அதிலிருந்து நீண்ட விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டுடன் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

விஷ்ணு விஷால் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது ராட்சசன் தான். இயக்குனர் ராம்குமார் உடன் ஏற்கனவே விஷ்ணு விஷால் முண்டாசுப்பட்டி என்ற வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படத்தில் நடித்தார்.

- Advertisement -

அது விஷ்ணு விஷாலுக்கு நல்ல பெயரை பெற்று தந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் மாபெரும் ஹிட் அடைந்தது. இதைத் தொடர்ந்து ஹிந்தி போன்ற பிற மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இது ராட்சசன் படத்தில் இரண்டாவது பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்காக அடுத்த மாதம் கொடைக்கானலில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் விஷ்ணு விஷனுக்கு ஜோடியாக சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்க உள்ளார் என தெரிகிறது. ராம்குமார், தனுஷ் உடன் ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகள் ஆகியும் அது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாததால் தற்போது ராம்குமார் விஷ்ணு விஷாலுடன் இணைய உள்ளார். இந்த ஜோடி ஹாட்ரிக் வெற்றியைப் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த திரைப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular