Wednesday, April 24, 2024
- Advertisement -
Homeசினிமா"மீண்டும் ராட்சசன் இயக்குனருடன் இணைகிறார் விஷ்ணு விஷால்"? - புதிய அப்டேட் என்ன!

“மீண்டும் ராட்சசன் இயக்குனருடன் இணைகிறார் விஷ்ணு விஷால்”? – புதிய அப்டேட் என்ன!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு இவர் நடித்த  நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி ஜீவா திரைப்படங்கள்  மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வளமா  வருகிறார் இவர்.

- Advertisement -

வித்தியாசமான கதையம்சத்தில் இவர் இயக்குனர் ராம்குமார் உடன் இணைந்து பணியாற்றிய முண்டாசுப்பட்டி என்ற திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர்களை என்றும் இரண்டாவது முறையாக இணைந்து ராட்சசன் என்ற திரைப்படம் உருவானது. ஆங்கிலப் படங்களுக்கு இணையான திரில்லர் கதை அம்சத்துடன் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது விஷ்ணு விஷால்  விக்ராந்துடன் இணைந்து லால் சலாம் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்தினை சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். ஏ ஆர் ரகுமானின் இசையில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் இத்திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து  இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிலர் இந்த திரைப்படம்  சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த  ஹிந்தி படத்தின் தகவல் எனவும் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி என்ற திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து  லால் சலாம் திரைப்படத்திற்கு பிறகு புதிய திரைப்படங்களில் நடிப்பதற்கான கதை விவாதங்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். ராட்சசன் மற்றும் முண்டாசுப்பட்டி திரைப்படத்தை இயக்கிய ராம்குமாருடன்  இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது அவர்கள் இணையப்போகும் மூன்றாவது திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்திற்கான கதை விவாதங்களும் நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

முதல் படத்தை கிராமத்து பின்னணியில் புகைப்படக் கலைஞரின் வாழ்க்கையை மையப்படுத்தி வித்தியாசமாக எடுத்திருந்த ராம்குமார்  இரண்டாவது படத்தை சைக்கோ திரில்லர் கதையம்சத்துடன் நகர பின்னணியில் எடுத்து வெற்றி படமாக்கினார். தற்போது இவர்கள் இருவரும் இணை இருக்கும் மூன்றாவது படம்  காதல் பேண்டஸி கதை களத்தில் உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இத்திரைப்படத்திற்கான அறிவிப்பு விரைவிலேயே வெளியாகும் எனவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

Most Popular