Thursday, July 25, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாவிடாமுயற்சி ஷூட்டிங்கில் பெரிய விபத்து.. மயிரிழையில் உயிர் தப்பிய அஜித் & ஆரவ்.. வீடியோ வெளியீடு

விடாமுயற்சி ஷூட்டிங்கில் பெரிய விபத்து.. மயிரிழையில் உயிர் தப்பிய அஜித் & ஆரவ்.. வீடியோ வெளியீடு

அஜித்குமார் – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படமான விடாமுயற்சியுடன் லேட்டஸ்ட் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அஜித் மற்றும் ஆரவ் சென்ற கார் திடீரென தடம் புரண்டு கவிழ்ந்து விழும் விபத்து வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சுரேஷ் சந்திரா.

- Advertisement -

அப்டேட் வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் வீடியோவை பார்த்த ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வருத்தத்தையுமே பெற்றனர். தல அஜித்குமார் தன் படங்களின் ஸ்டன்ட் காட்சிகளில் டூப் போடாமல் தானே முன்வந்து ரிஸ்க் எடுத்து நடிப்பார். ஹாலிவுட் டாம் க்ரூஸ் போல கோலிவுட்டுக்கு அஜித்குமார் என்றே கூறலாம். அவ்வகை ஸ்டன்ட் காட்சிகளில் ஆரம்பம், வீரம், வலிமை ஆகிய படங்களில் விபத்துகளையும் சந்தித்துள்ளார்.

இன்று வெளியான வீடியோ நவம்பர் 2023ல் ஷூட் செய்யப்பட்டது ஆகும். அஜித் காரை ஓட்ட உடன் நடிகர் ஆரவ் கைகள் கட்டப்பட்டு கடதபட்டவாரு இருந்தார். வேகமாக வளைந்து செல்லும் ஸ்டன்ட் காட்சி படமாகப்படும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்தது. உடனே படக்குழுவினர் விரைந்து ஓடி மீட்டனர்.

- Advertisement -

அஜித்குமார் வாகம் ஓட்டுவதில் சமார்தியமானவர். ஆனால் ஆணைக்கும் அடி சறுக்கும் என்பது போல எதிர்பாராத வகையில் விபத்தில் சிக்கினார். மிகவும் உயர்தரமான கார் என்பதால் எந்தவித பெரிய பாதிப்பும் இல்லாமல் இருவரும் தப்பிதனர்.

- Advertisement -

தன்னை நம்பி வந்த நபருக்கு சாவு பயத்தைக் காட்டி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அஜித்துக்கு உள்ளது. அதனாலேயே சில மாதங்களுக்கு முன்பு தான் எங்கு சென்றாலும் நடிகர் ஆரவை கூடவே அழைத்துச் சென்றாராம். அவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஆரவ் வெளியிட்டு இருப்பார்.

இன்று வெளியான இந்த வீடியோ காட்சி ஷூட்டிங்கிற்காக வேண்டுமென்பே திட்டமிட்டு எடுக்கப்பட்டது என சிலர் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். ஆனால் திட்டமிட்ட ஸ்டன்ட் காட்சியின் மத்தியில் இது எதிர்பாராமல் நடந்த விபத்து என்பது தான் உண்மை. இதனை உடன் பயணித்த நடிகர் ஆரவ்வே தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்களை சோகத்தில் தள்ளியுள்ளது. இனிமேல் இது போன்ற ரிஸ்க்கான காட்சிகளில் பாத்திரமாக நடிக்குமாரு சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

Most Popular