Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாகொஞ்சம் கூட தயங்கல.. பேரரசை மேடையில் ஓப்பனாக கலாய்த்த இயக்குனர் வெற்றிமாறன் - வீடியோ இணைப்பு

கொஞ்சம் கூட தயங்கல.. பேரரசை மேடையில் ஓப்பனாக கலாய்த்த இயக்குனர் வெற்றிமாறன் – வீடியோ இணைப்பு

வெற்றிமாறன் எதையுமே ஓப்பனாக தைரியமாக பேசுபவர். அந்த வகையில் அவர் அண்மையில் இயக்குனர் பேரரசை மேடையில் கலாய்துவிட்டார். அவரது அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

- Advertisement -

பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.விக்.பிரகாஷ், இவானா, பாரதிராஜா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கள்வன். யானைகள் வேட்டையை மையமாகக் கொண்டது படத்தின் கதைக்களம். இப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளது.

அதற்கான இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவுடன் பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இதில் பேசிய பேரரசை இயக்குனர் வெற்றிமாறன் ஓப்பனாக கலாய்த்துள்ளார். அவரின் இது போன்ற பேச்சு புதிதல்ல. பலமுறை நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பளிச்சென குறைகளை கோபத்துடன் வெளிப்படையாக பேசுபவர். அதே போல பேரரசின் பேச்சை கேலி செய்துள்ளார்.

- Advertisement -

முதலில் இயக்குனர் பேரரசு, “ யானை என்றாலே ராசி தான். யானை என்றால் பிள்ளையார். கும்கி படம் மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது. மேலும் நல்ல நேரம், அன்னையோர் ஆலையம் என வேறு சில வெற்றிப் படங்களும் உள்ளன. அதனால் யானை என்றாலே ஒரு ராசி தான். இதே போல கள்வன் படமும் சிறப்பாக அமைய வேண்டும். ” என்றார்.

- Advertisement -

இதற்கு பிறகு பேசிய வெற்றிமாறன், “ யானையை வைத்து எடுத்தாலும் டைனோசரை வைத்து எடுத்தாலும் திரைக்கதை நன்றாக இருந்தால் மட்டுமே படம் ஓடும். ” என சிரித்துக் கொண்டே பேசினார். பேரரசின் பேச்சை அதே இடத்தில் சற்றுக் தயங்காமல் கலாய்த்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.

வெற்றிமாறன் எப்போதுமே எதார்த்தமாக பேசுபவர். இது போன்ற மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவர். சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு யூட்யூப் வீடியோக்களில் கூட பெரிய படங்களில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டி கேலி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular