Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமா" நாங்கள் தான் பொங்கல் வின்னர் " என மாறி மாறி போஸ்டர் வெளியிட்டு சண்டை...

” நாங்கள் தான் பொங்கல் வின்னர் ” என மாறி மாறி போஸ்டர் வெளியிட்டு சண்டை போட்ட துணிவு – வாரிசு படக்குழு… !

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வருட பொங்கல் ஒரு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது நீண்ட நாட்களுக்கு பிறகு தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியதால் திரையரங்கு உரிமையாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் .

- Advertisement -

கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளி வருகிறது . ஏற்கனவே ட்ரெய்லர் ஃபர்ஸ்ட் லுக் என ஒவ்வொரு பந்தயத்திலும் இரண்டு படங்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டன . ட்ரெய்லரிலும் துணிவு தான் வெற்றி பெற்றது . படம் வெளியான ஜனவரி 11ஆம் தேதி முதலே தல கை தான் ஓங்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வந்தன . படமும் ஹாலிவுட் படத்திற்கு இணையான ஆக்சன் உடன் தல தன்னுடைய மேனரிசத்தில் படத்தில் மாஸ் காட்டி இருந்தார் .

இதனால் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடித்து போய் உள்ளது . இன்றுவரை ஹவுஸ்புல் காட்சிகளாகவே ஓடிவரும் துணிவு தான் படம் வெளியான நாளிலிருந்து நம்பர் 1 இடத்தில் இருப்பதாக தல ரசிகர்களும் சினிமா விமர்சிகர்களும் கூறி வந்தனர் .

- Advertisement -

பரபரப்பான திரைக்கதையுடன் ஆக்சன் காட்சிகள் அஜித்தின் ஸ்டைலிஷ் ஆன லுக் என படம் பக்கா மாசாக வந்திருப்பது படத்திற்கு முக்கிய பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது . இந்தப் பொங்கலும் தல பொங்கல் தான் என்பதை துணிவு படத்தின் வெற்றி உறுதி செய்துள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வந்தன .

- Advertisement -

இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் பட தயாரிப்பு நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளது .

அந்த நிறுவனம் ” உண்மையான வெற்றி துணிவு . இந்தப் பொங்கல் துணிவு பொங்கல் . இந்த திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றியாக்கி தந்த ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு
எங்களது நன்றிகள் என்று பதிவிட்டுள்ளது . இதனால் துணிவு படத்தின் வெற்றி உறுதியாகிவிட்ட சந்தோசத்தில் இருக்கிறார்கள் தல ரசிகர்கள் .

Most Popular