சினிமா

“வரலட்சுமி சரத்குமாரின் கொன்றால் பாவம் திரைப்படம் எப்படி இருக்கிறது” – பிரஸ் ஷோ ஒரு பார்வை!

கன்னட சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மாநில விருது வாங்கிய திரைப்படம் ஆ கரால ராத்ரி. இந்தத் திரைப்படத்தினை இயக்கியவர் தயால் பத்மநாபன். இத்திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்ற மார்ச் மாதம் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இந்த திரைப்படத்திற்கு அணை எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. வருகின்ற வெள்ளிக்கிழமை நாளை மறுநாள் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இத்திரைபடத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் ஒன்று தற்போது வெளியாக இருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தில் இவருடன் சந்தோஷ் பிரதாப் ஈஸ்வரி ராவ் மற்றும் சார்லி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜான் மகேந்திரன் மற்றும் இயக்குனர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளனர்.

Advertisement

இத்திரைப்படம் நாளை மறுநாள் வெளியாவதை முன்னிட்டு பத்திரிக்கையாளர்களுக்கான காட்சி நடைபெற்றது . அவற்றிலிருந்து பாசிட்டிவான விமர்சனங்களை திரைப்படத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. திரைப்படத்தின் திரைக்கதை மிகவும் விறுவிறுப்பாக இருப்பதாகவும் சந்தோஷ் பிரதாபின் நடிப்பு பாராட்டும் வகையில் உள்ளது என்றும் மூத்த நடிகர் சார்லியின் நடிப்பும் சாம் சி .எஸ் இன் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் என தெரிவித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு மற்றும் படமாக்கப்பட்ட விதம் மிக அருமையாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

கதை தான் திரைப்படத்தின் முக்கியமான அம்சம் . அதற்கு ஏற்ற திரைக்கதையை அமைத்து ரசிகர்களுக்கு போர் அடிக்காத வகையில் அருமையான திருப்பங்களுடன் கூடிய கச்சிதமான திரைக்கதையை இயக்குனர் அமைத்திருக்கிறார் . படத்தின் நாயகி வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் புதிய பரிணாமத்தை காட்டியிருக்கிறார் இந்த திரைப்படத்தில். படத்தின் பின்னணி இசை பெரும் பலமாக அமைந்திருக்கிறது. படத்தில் இடம் பெற்றுள்ள மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பணிகளை கச்சிதமாக செய்திருக்கின்றன . படம் அருமையாக இருக்கிறது என்று பத்திரிகையாளர்களின் காட்சிக்கு பின் படம் குறித்து முக்கிய பத்திரிகையாளர்கள் விமர்சனம் கூறினர்.

Advertisement

இந்நிலையில் இந்த திரைப்படமானது மார்ச் 10ஆம் தேதி வெளியாகி அகிலன் திரைப்படத்துடன் போட்டியிட இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் அகிலன் . இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய திரைப்படம். சமீபத்தில் வெளியான அந்த திரைப்படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது கொன்றால் பாவம் திரைப்படத்தின் பத்திரிகையாளர்களின் திரை விமர்சனம் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்றால் மறுக்க முடியாது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top