சினிமா

பத்து தல படத்தின் முதல் பாட்டு எப்போது ? புதிய அப்டேட் !

முன்பொரு காலத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக அறிமுகமாகி இன்று எஸ் டி ஆர் ஆக உயர்ந்து நிற்பவர் சிம்பு . தமிழ் சினிமாவின் இயற்று இறக்கங்கள் அத்தனையும் இந்த இளம் வயதிலேயே பார்த்துவிட்டார் என்றால் அது மிகையாகாது . உடல் பருமன் பிரச்சனை காரணமாக கேலிக்கு உள்ளாகி பின்னர் அதனை ஒரு சவாலாக எடுத்து தீவிரமான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் எடை குறைத்து திரும்பி வந்தார் லிட்டில் சூப்பர் ஸ்டார்.

அதனைத் தொடர்ந்து இவர் நடித்த மாநாடு வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்து மீண்டும் தன்னுடைய இடத்தை கைப்பற்றி இருக்கிறார் என்று சொல்லலாம் . தனது ஸ்டைல் மற்றும் ஆக்சன் நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார் எஸ்.டிஆர்.

இவரது நடிப்பில் அடுத்து உருவாகி கொண்டிருக்கும் படம் தான் பத்து தல . இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு வந்த நாளிலிருந்து இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு சிம்புவின் ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் திரையுலகமே இந்தப் படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது . இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வைத்து பார்க்கும் போது இந்தப் படமானது ஒரு கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது . இந்தப் படம் முப்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும் .

சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இசை புயல் ஏ ஆர் ரகுமான் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா அவர்களை இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

தனது முதல் படமான சில்லுனு ஒரு காதலை ஒரு மெல்லிய காதல் கதையாக இயக்கிய கிருஷ்ணா அவர்கள் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்குப் பிறகு தமிழில் இயக்க இருக்கும் இரண்டாவது படம் இதுவாகும் . அதுவும் இந்த படத்தை ஒரு கேங்ஸ்டர் படமாக அவர் இயக்குவதால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது .

இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தப் படமானது மார்ச் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது . இந்நிலையில் படத்தின் முதல் பாடல் ஆனது விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன . மேலும் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழாவானது மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top