சினிமா

“தென்னிந்திய சினிமாவில் மாஸ் ஹீரோக்களுடன் நடிக்கும் போது மூளையை கழட்டி வைத்து விட்டு தான் நடிப்பேன்” – பிரபலமான வில்லன் நடிகரின் திமிர் பேட்டி!

பாலிவுட் நடிகர்கள் தமிழ் சினிமாவில் வில்லனாக நடிப்பது ஆரம்பக் காலங்களில் இருந்தே நடந்து வரும் ஒரு வழக்கம். பாலிவுட் நடிகர் அம்ஜத் கானிலிருந்து இன்று சஞ்சய் தத் மற்றும் அனுராக் காசியாப் வரை முக்கியமான வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று தமிழ் சினிமாவில் நடித்துள்ளனர். வித்தியாசமான வில்லன்களுக்கு தமிழ் சினிமாவில் என்றுமே மிகப்பெரிய வரவேற்பு இருந்திருக்கிறது. தற்போதைய காலகட்டங்களிலும் வில்லன் கதாபாத்திரங்கள் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுவதோடு கொண்டாடப்படும் வருகின்றன. உதாரணமாக இமைக்கா நொடிகள் படத்தில் நடித்த அனுராக் மற்றும் தனி ஒருவன் படத்தில் நடித்த அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் ஆகியவற்றை குறிப்பிடலாம் .

இதேபோன்று பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வில்லனாக இருக்க மாணவர் ராகுல் தேவ் . புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் நரசிம்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து அர்ஜுன் நடிப்பில் வெளியான பரசுராம் ராகவா லாரன்ஸ் உடன் முனி ஜெயம் ரவி நடித்த மழை சூர்யாவின் நடிப்பில் கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவான ஆதவன் அஜித் குமார் நடிப்பில் வெளியான வேதாளம் ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார் . சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடித்த லெஜன்ட் திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் .

Advertisement

இவர் தமிழ் சினிமா மட்டுமல்ல அது தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் மராத்திய பெங்காளி போஜ்புரி என இந்திய வட்டார மொழி திரைப்படங்களில் தன்னை ஒரு நடிகராக முன் நிறுத்தி இருப்பவர். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்று சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது . தென்னிந்திய சினிமாக்களில் அதிகமாக நடித்து தென்னிந்திய சினிமாவையே குறை கூறும் வகையில் இவரது பேட்டி இருப்பதாக சினிமா ரசிகர்களும் விமர்சிகர்களும் தங்களது கண்டனங்களை பகிர்ந்து வருகின்றனர் .

அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் இவர் தென்னிந்திய சினிமாவின் மாஸ் ஹீரோ படங்களில் நடிக்கும் போது மூளையை கழட்டி வைத்து விட்டு தான் நடிப்பு எனக் கூறியிருக்கிறார் . நான் நன்றாக படித்த குடும்ப பின்னணியில் இருந்து வந்தவன் . தென்னிந்திய சினிமாக்கள் இன்னும் பழைய டெம்ப்லேட்டுகளையே பாலோ செய்து கொண்டிருக்கின்றன என்று கூறியிருக்கிறார். இரண்டு ஹீரோக்கள் சண்டையிடும் போது ஒருவர் சட்டையை கழற்றிக் கொண்டு தனது உடம்பை காட்டுவார். அது கமர்சியலுக்காக செய்யப்படுகிறது . யாருடைய படைப்பாற்றலையும் நாம் குறை சொல்லக்கூடாது எனவும் தெரிவித்திருக்கிறார் .

Advertisement

மேலும் இது பற்றிய தொடர்ந்து பேசி இருக்கும் அவர் ஜிம் பாடியான என்னை வலுவில்லாத ஹீரோக்கள் அடிப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். என்ன செய்வது அனுசரித்து நடித்து தான் ஆக வேண்டும் என கூறி இருக்கிறார். இவரது கருத்துக்களுக்கு சினிமா ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாலிவுட்டில் மட்டும் எல்லா ஹீரோக்களும் என்ன ஜிம் பாடிய என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top