சினிமா

வாரிசு பட டிரெய்லர் எப்போது ? நடிகை சமந்தா கொடுத்துள்ள அப்டேட் !

கடந்த 24ஆம் தேதி இரவு தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும்  வாரிசு படத்தின் ஆடியோ நேரு உள் அரங்கத்தில் வைத்து வெளியிடப்பட்டது இதனைத் தொடர்ந்து படத்தின்  ட்ரெய்லர் மற்றும் வெளியாகும் தேதி பற்றிய அறிவிப்புகள் டிசம்பர் 31ஆம் தேதி இரவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த திரைப்படத்தைப் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை .

இந்நிலையில் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது  திரைப்படத்துறையினரும் தளபதியின்  வாரிசு படம் பற்றிய  அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர் . வாரிசு படத்தின் டிரைலர்  எதிர்பார்த்து  சினிமா பிரபலங்களும் காத்திருக்கின்றனர்.

தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் வம்சி அவர்கள்  இயக்க  ரஷ்மிகா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார்  யோகி பாபு  பிரகாஷ் ராஜ்  மற்றும் நடிகர் சாம் உட்பட  பலர் நடித்திருக்கின்றனர் .

இந்தப் படத்திற்கு தெலுங்கில் பிரபல  இசையமைப்பாளராக இருக்கும் தமன் அவர்கள்  இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் வெற்றி பெற்ற நிலையில்  இதன் இசை  வெளியீட்டு விழா கடை 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் திரை உலகத்தின் முன்னணி நட்சத்திரங்களும்  தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகில் உள்ளவர்களும்  கலந்து கொண்டனர்.

படத்தின் இசையானது வெளியிடப்பட்ட நிலையில்  டெய்லர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து கொண்டிருந்தது. இன்னல்கள் கடந்த 31ம் தேதி  அஜித் குமாரின் துணிவு  படத்தின் டிரைலர் ஆனது  வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதனால் வாரிசு படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று  ரசிகர்களிடையே மட்டும் இல்லாமல்  திரைத்துறையினரிடமும் பெரும் கேள்வியை எழுப்பி உள்ளது .

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில்  முன்னணி நடிகையாக வலம் கொண்டிருப்பவர் சமந்தா . இவர் சமீபத்தில் நடித்த யசோதா என்ற படம் பெரும் வெற்றியை பெற்றது. மையோசைட்டிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர்  அதற்காக தற்போதைய சிகிச்சை பெற்று வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை சமந்தா அவர்கள் வாரிசு படத்திற்கான ட்ரெய்லர் விரைவில் அறிவிக்கப்படலாம் என்பதைப் போல பூடகமாக ஒரு  ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் ‘நான் டேக் செய்தவர்களை எல்லாம்  யாரோ கடத்தி விட்டார்கள்.  இதனால் வாரிசு படம் பற்றி அப்டேட் எனக்கு இதுக்கு முன் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அதற்கான  விடை எனக்கு கிடைத்துவிட்டது” என்று பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக வாரிசு படத்தின் டிரைலர் பற்றி அறிவிப்பு  மிக விரைவில் வெளியாகும் என்று தளபதி ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top