Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமா"மகனிடம் கூட அதைப் பற்றி பேசக்கூடாது" என தளபதி விஜயை ஆட்டுவிக்கும் நபர் யார்?

“மகனிடம் கூட அதைப் பற்றி பேசக்கூடாது” என தளபதி விஜயை ஆட்டுவிக்கும் நபர் யார்?

தமிழ் சினிமாவில் தளபதியாக வளர்ந்து நிற்பவர் விஜய் . இவரது நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம்  வெளியாக இருக்கிறது . இந்நிலையில் சமீப காலமாகவே விஜயின் அரசியல் பிரவேசம் பற்றிய  செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன .

- Advertisement -

சமீபத்தில் கூட பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த  மாணவ  மாணவிகளை அழைத்து விருது வழங்கி அந்த நிகழ்ச்சியில் அவர்களுடன் கலந்துரையாடினார் விஜய் . இதுவும் அவருடைய அரசியல் பிரவேசத்திற்கான முன்னோட்டமாகவே பார்க்கப்பட்டது .

இதுகுறித்து பிரபல பத்திரிகையாளரான கோடாங்கி சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் வெளிப்படையாகவே பேசி இருக்கிறார் . தளபதி விஜயுடன் எப்போதும் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் என்ற நபர் தான்  விஜய்யை ஆட்டுவித்து வருவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் அரசியல் தொடர்பான எந்தவித கருத்துக்களையோ   பேசுவதற்கு அவர் விஜய்யை அனுமதிப்பதில்லை எனவும் தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

விஜய் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் கூட அரசியல் பற்றிய பேச்சுக்களை  பேசவிடாமல் கடும் அழுத்தத்தில் வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் . மேலும் விஜயின் அரசியல் நிலைப்பாடு பற்றி அவரது மகன் சஞ்சயிடம் கூட  தளபதி விஜய் ஆல் தெரிவிக்க முடியவில்லை . அந்த அளவிற்கு விஜய் தனது வட்டத்திற்குள்ளேயே வைத்திருக்கிறார் புஸ்ஸி ஆனந்த் என தெரிவித்திருக்கிறார் கோடாங்கி.

- Advertisement -

தளபதி விஜய் அரசியலில் இறங்க இருப்பதாக செய்திகள் வருவதை தொடர்ந்து அடுத்து இரண்டு மூன்று வருடங்களுக்கு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாகவும் தகவல்கள் வருகின்றன . இதனால் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படம் தான் தற்போதைக்கு அவரது கடைசி படமாக இருக்கும் என்று செய்திகள் நிலவி வருகின்றன இதுகுறித்து ஆனந்திடம் கேட்டபோது நாங்கள் அப்படி சொன்னோமா இதுதான் தளபதியின் இறுதி படம் என்று இல்லை தளபதி அப்படி சொன்னாரா என கேள்வி எழுப்பி இருக்கிறார்

சமீப காலமாகவே விஜயின் நடவடிக்கைகள் அரசியல் குறித்து இருந்து வந்திருக்கிறது. அவர் தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கம் ஆக மாற்றியது முதல் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் கடந்த ஏப்ரல் மாதம் அம்பேத்கர் சிலைக்கு மாவட்டம் தோறும் மாலை அணிவித்து அவரது பிறந்தநாளன்று மரியாதை செலுத்திய ஏதும் குறிப்பிடத்தக்கது . அதனைத் தொடர்ந்து உலக பட்டினத்தன்று அன்னதானம் மற்றும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விருதுகள் என விஜய் அடுத்தடுத்து ஸ்கோர் செய்து கொண்டு செல்கிறார் .

Most Popular