சினிமா

20 வருடங்களாக ஏன் அஜித் படத்தில் வடிவேலு நடிப்பதில்லை? – காரணமே அஜித்தா?? யாரும் அறிந்திராத தகவல்

யாரும் அறிந்திராத நடிகர் அஜித் மற்றும் வடிவேலு இருவருக்கும் இடையே நடந்த மனக்கசப்பு விவகாரம் தற்போது மற்றொரு நடிகர் ஒருவரால் வெளியே தெரியவந்துள்ளது.

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தமிழ் திரை உலகில் தன்னைத்தானே வளர்த்துக் கொண்டவர் நடிகர் அஜித். இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது. அதனால் முன்னணி நடிகனாக வலம் வருகிறார். படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் வெகு சில நடிகர்களுள் இவரும் ஒருவர். 

Advertisement

அதேபோல் தமிழ் சினிமாவில் உச்சபட்ச காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் வடிவேலு. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இவருக்கு பெரிதளவில் வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் இவர் அரசியலில் ஈடுபட்டு பேசக்கூடாததை பேசி சிக்கலில் மாற்றிக்கொண்டார். அதனால் மறைமுகமாக இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் சுற்றித் திரிகின்றன. கடந்த ஓராண்டாக மீண்டும் தமிழ் திரை உலகத்திற்கு வந்து படங்களில் நடித்து வருகிறார் வடிவேலு. 

இந்த இருவரும் தமிழ் திரை உலகில் தங்களது பாத்திரத்தில் உச்சத்தை தொட்டவர்கள். இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக மனக்கசப்பு இருப்பதை வடிவேலுவுடன் நிறைய படங்கள் நடித்துள்ள டெலிபோன் ராஜ் என்பவர் வெளியே கூறி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Advertisement

2002 ஆம் ஆண்டு ராஜா திரைப்படத்தில் நடிகர் அஜித் மற்றும் வடிவேலு இருவரும் ஒன்றாக நடித்துள்ளனர். அதற்குப் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. அதற்கான காரணங்கள் கூறப்பட்டு வந்தது. தற்போது தான் உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. 

அஜித் மற்றும் வடிவேலு இருவருக்கும் ஒத்துப் போகவில்லை. படப்பிடிப்பின் போது “அஜித்தே” என்று வடிவேலு அழைத்ததாகவும் அது அஜித்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பதால் அவரிடமிருந்து விலகி இருந்துள்ளார். அந்த மனக்கசுக்கு தற்போது வரை நீடித்து வருகிறது என டெலிபோன் ராஜ் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top