Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாதுணிவு கொண்டாட்டத்தின் போது சோகம்! - ரோகினி தியேட்டர் முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்த அஜித்...

துணிவு கொண்டாட்டத்தின் போது சோகம்! – ரோகினி தியேட்டர் முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்த அஜித் ரசிகர்!

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோரின் துணிவு-வாரிசு மோதல் இன்று அதிகாலையில் தொடங்கியது .

- Advertisement -

தல அஜித் மற்றும் தளபதி விஜயின் திரைப்படங்கள் எட்டு வருடங்களுக்குப் பிறகு நேருக்கு நேர் மோதுகின்றன . இதற்கு முன்பு விஜய் நடித்த ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் திரைப்படங்கள் கடந்த 2014 ஆண்டு ஒரே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது . தல தளபதியின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் அவர்களது ரசிகர்கள் இந்த திரைப்படங்களை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர் .

பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கும் உற்சாகத்திற்கும் அளவு இருக்காது . சில நேரங்களில் இது போன்ற கொண்டாட்டங்கள் அசம்பாவித சம்பவங்களில் முடிந்துவிடும் . அப்படி ஒரு சம்பவம் தான் சென்னை ரோகினி தியேட்டர் முன்பு இன்று நடந்தது .

- Advertisement -

தமிழகம் முழுவதும் துணிவு படத்தின் முதல் காட்சிக்காக காத்துக் கொண்டிருந்த வேளையில் அதனை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் . முதல் காட்சி திரையிடப்படுவதற்கு முன்பாக ரோகினி தியேட்டரின் முன்பு ஆடல் பாடல் உடன் அமர்க்களம் செய்து கொண்டிருந்தனர் .

- Advertisement -

அப்போது எதிர்பாராத விதமாக 19 வயதை உடைய அஜித் ரசிகர் லாரியின் மீது ஏறி நடனமாடி அதிலிருந்து தவறுதலாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

சென்னையைச் சார்ந்த 19 வயதில் இளைஞர் பரத் குமார் இவர் தான் அந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் . இரவு ஒரு மணி காட்சிக்காக கூடியிருந்த ரசிகர்கள் அந்த சாலை வழியாக கடந்து சென்ற ஒரு டேங்கர் லாரியை மறித்து அதன் மீது ஏறி நின்று நடனமாடிக் கொண்டிருந்தனர் . அப்போது எதிர்பாராத விதமாக பரத்குமார் என்ற இளைஞர் லாரியில் இருந்து விழுந்து பலத்த காயம் அடைந்தார் . உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

இந்தச் சம்பவம் ஆனது அஜித் ரசிகர்களிடையே பலத்த சோகத்தை ஏற்படுத்தியது . தல படத்தினை உற்சாகமாக காண வந்த ரசிகர் ஒருவர் எதிர்பாராத சம்பவத்தால் உயிரிழந்தது பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . என்னதான் கொண்டாட்டங்களில் உன் உற்சாகத்திலும் மூழ்கியிருந்தாலும் நமது பாதுகாப்பையும் நலனிலும் அக்கறை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் .

Most Popular