சினிமா

விஜய் எனக்கு எப்போதும் ஸ்பெஷல்.. மனம் திறந்த திரிஷா

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் முன்னணி நடிகையின் ஒருவராக இருந்தவர் நடிகை திரிஷா.இவர் 1999இல் மிஸ் சென்னை ஆக இருந்திருக்கிறார். இவருக்கென்று ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இப்படிக்கு குறுகிய காலத்தில் பெயரைப் பெற்று திரிசா சில காலம் சினிமா துறையில் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு கம் பேக் கொடுத்து இருக்கிறார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது .பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் திரிஷா ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்து இருக்கிறார்.

Advertisement

நீண்ட நாட்களுக்குப் பிறகு த்ரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் முகத்தில் அதே பொன் சிரிப்போடு திரிஷாவை கண்ட ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்தனர். சினிமா உலகில் திரிஷாவை ரசிகர்கள் எவ்வளவு எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.

இதை தொடர்ந்து த்ரிஷா சினிமா உலகிற்கு மீண்டும் வந்திருப்பது தொடர்பாக இணையங்களில் நிறைய நேரலைகள் பரவி வருகிறது. இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரிஷாவை பிரபலமாக்கியது இயக்குனர் தரணி இயக்கிய தளபதி விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் தான். 90ஸ் கிட்ஸ் களுக்கு தமிழ் சினிமாவில் பிடித்த ஜோடி என்றால் அது விஜய் சிம்ரன் என்பார்கள் அதேபோல் பின்பு வந்த காலங்களில் திரைப்படங்களில் விஜய்க்கு பொருத்தமான ஜோடியாக அமைந்தது திரிஷா தான். இதன் காரணத்தால் திரிஷா விஜய்யுடன் கில்லி, ஆதி, குருவி, திருப்பாச்சி என்று வரிசையாக நான்கு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

Advertisement

இதனால்தான் விஜய் பற்றி ஒரு நேர்காணலில் த்ரிஷாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு விஜய் எனக்கு எப்பொழுதும் ஸ்பெஷல் தான் நான் அவருடன் நான்கு படங்கள் நடித்திருக்கிறேன் செட்டில் எப்போதும் அமைதியுடன் தான் இருப்பார் நான் வியக்கும் விஷயங்களில் அவர் நடிக்கும் படங்களுக்காக மெனக்கெடுவது அவருடைய ப்ரொபஷனல் இசம் எனக்கு மிகவும் பிடிக்கும் இன்று திரிஷா கூறியிருந்தார்.

இன்னும் பல முன்னணி நடிகர்களோடு த்ரிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார் இருப்பினும் தளபதி விஜய்யோடு அவர் நடித்த படங்கள் அவருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top