Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாஒரே நேரத்தில் 10 லட்ச உறுப்பினர்கள் வருகை.. சர்வர் செயலிழப்பு.. விஜய் அறிமுகம் செய்துள்ள செயலியில்...

ஒரே நேரத்தில் 10 லட்ச உறுப்பினர்கள் வருகை.. சர்வர் செயலிழப்பு.. விஜய் அறிமுகம் செய்துள்ள செயலியில் ரசிகர்கள் சாதனை.. !

தளபதி விஜய் 2026 தேர்தலுக்காக மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் டெல்லியில் ‘ தமிழக வெற்றிக் கழகம் ’ எனும் பெயரில் கட்சியைத் துவங்கி நல்ல வரவேற்பை பெற்றார். முழு நேர மக்கள் பணிக்காக சினிமாவில் இருந்து இன்னும் 2 படங்களுடன் விலகவும் உள்ளார்.

- Advertisement -

கட்சிப் பெயரை அறிவித்த பிறகு தென் மாவட்டங்களில் முதல் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதனை நாம் எதிர்பார்க்கலாம். கட்சியின் அடுத்தகட்ட படியாக மக்களை தன் கட்சியில் ஒரு உறுப்பினராக அழைத்து இன்று செயலி ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய்.

மேலும் வாட்ஸ்அப், டெலிகிராம் ஆகியவை மூலம் ‘ TVK ’ என மெசேஜ் செய்த பின்னர் வாக்காளர் அட்டையை அனுப்பி கட்சியில் உறுப்பினராக சேரலாம். தலைவர் விஜய் இதற்காக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு ‘ பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் ’ எனப் பேசத் துவங்கி தன் கட்சியின் கொள்கைகள் மற்றும் உறுதிமொழி பிடித்து இருந்தால் கட்சியில் சேர சொல்லி அழைப்பு விடுத்தார்.

- Advertisement -

விஜயின் ரசிகர்கள் இங்கும் அது வேகமாக நுழைந்து செயலியின் சர்வரை செயலிழக்க வைத்துள்ளனர். 40 நிமிடங்களில் 10 லட்சம் மேல் அழைப்பு வந்ததால் அதைத் தாங்க முடியாமல் செயலியே செயல் இழந்தது. அதுமட்டுமல்ல 7 லட்ச ஓடிபி அழைப்பிகளும் அதற்க்கு காரணம். விரைவில் அது சரி செய்யபட்டு மக்கள் தொடர்ந்து உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர். இதனை ஓர் சாதனையாக சமூக வலைத்தளத்தில் போஸ்ட் செய்து கொண்டுள்ளனர்.

- Advertisement -

பொதுவாக விஜய்யின் பாடல், டிரெய்லர் யூட்யூப்பில் வந்தாலே குறைந்த நேரத்தில் அதிக பார்வைகள், லைக்குகள் எனப் படத்துக்கு படம் சாத்னை புரிந்து வருவர். அதே பாணியில் தற்போது தமிழக வெற்றிக் கழக செயலி. முதல் உறுப்பினராக விஜய் தனது அடையாள அட்டையை பதிவிட்ட போல விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

அடுத்தடுத்து மாநாடுகள், அறிவிப்புகள் என விஜய் முழு நேர மக்கள் சேவையை தொடரவுள்ளார். அவரது முந்தைய சேவைகளும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular