Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாஇந்த ஒரே படத்தால் என் கேரியரை இழந்தேன்- நடிகர் பரத்

இந்த ஒரே படத்தால் என் கேரியரை இழந்தேன்- நடிகர் பரத்

2003 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் பரத். இவர் அந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான சித்தார்த்தின் நண்பனாக நடித்திருப்பார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து காதல், பிப்ரவரி 14, எம்டன் மகன் கூடல் நகர், சேவல் நேபாளி போன்ற பல திரைப்படங்கள் தமிழில் நடித்திருக்கிறார் நடிகர் பாரத். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

இவர் ஏறத்தாழ 49 திரைப்படங்கள் இதுவரை நடித்திருக்கிறார்.ஆனால் அதில் பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியை தழுவியதாகத்தான் இருந்திருக்கிறது. 20 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் நடிகர் பரத் பெருமளவில் பிரபலமடையாதது ஏன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

- Advertisement -

தற்பொழுது நடிகர் பரத் இயக்குனர் ஆர் பி பாலா இயக்கத்தில் லவ் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் வாணி போஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு எந்தவித ஆர்பரிப்பும் நிகழவில்லை. இந்த திரைப்படத்தின் உடைய பிரமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகர் பரத்திடம் ரசிகர்களிடம் இருக்கும் கேள்வி பற்றி கேட்கப்பட்டது. நீங்கள் ஏன் இத்தனை ஆண்டுகள் ஆகியும் பெரும் அளவில் பிரபலமாகவில்லை என்ற கேள்விக்கு நடிகர் பரத் நான் நேபாளி என்று ஒரு திரைப்படம் நடித்தேன்.

அந்தத் திரைப்படம் குடும்பங்கள் பார்க்கக் கூடிய திரைப்படமாக அமையவில்லை. ஆபாச காட்சிகள் இருந்ததனால் அந்த திரைப்படத்திற்கு ஏ சர்டிபிகேட் தான் கிடைத்தது. இதன் காரணத்தினாலே இந்த திரைப்படத்தின் மீது குடும்ப ரசிகர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை.

அதே சமயத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது. இது முற்றிலும் குடும்பங்கள் கொண்டாட கூடிய திரைப்படமாக அமைந்தது. அதனால் நேபாளி திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதற்குப் பிறகு எந்தவித பட வாய்ப்பு எனக்கு அதிகம் கிடைக்கவில்லை என்று பேசியிருந்தார் நடிகர் பரத்.

தன்னுடைய சினிமா வாழ்வில் ஏற்பட்ட சரிவிற்கு நேபாளி திரைப்படத்தின் உடைய இயக்குனரான வி இசட் துறை தான் காரணம் என்பது போல் நடிகர் பரத் பேசியிருந்தார். இயக்குனர் வி இசட் துறை இதற்கு முன்பு தல அஜித்தின் உடைய முகவரி திரைப்படம் சிம்பு உடைய தொட்டி ஜெயா திரைப்படம் என்று நல்ல கதைகளை கொண்ட திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

10 வருடம் 20 வருடம் முன்பு பிரபலம் அடையாமல் இருந்த பல நடிகர்கள் தற்பொழுது திடீரென ஒரே திரைப்படத்தின் மூலமே உயர்ந்த இடத்திற்கு சென்று இருக்கிறார்கள். அது போல் சில ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் பரத் நல்ல ஒரு கம் பேக்கை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Most Popular