Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாஒடிடியில் இந்த வாரம் ரிலீஸ் ஆகும்  திரைப்படங்கள் என்ன?

ஒடிடியில் இந்த வாரம் ரிலீஸ் ஆகும்  திரைப்படங்கள் என்ன?

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை முன்னிட்டு திரையரங்கில் புது படம் ரிலீஸ் ஆவது போல் ஓ டி டி தளங்களில் பல்வேறு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டு இருக்கிறது.

- Advertisement -

தயாரிப்பாளர்களுக்கு வரப்பிரசாதம் போல் இந்த ஓட்டிட்டி தளம் வந்திருக்கிறது. திரையரங்கில் ஓடாமல் போன திரைப்படம் கூட ஓடிடியில் வெற்றி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்த வாரம் ஒடிடியில் வெளியாகி உள்ள திரைப்படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகச் சைதன்யா நடித்த கஸ்டடி திரைப்படம் அமேசானில் ரிலீஸ் ஆக உள்ளது. தளபதி விஜயை வெங்கட் பிரபு இயக்க உள்ள நிலையில் இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் மலையாள சினிமாவில் 180 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்த 2018 என்ற திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

- Advertisement -

தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் இந்த படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை திரையரங்கில் பார்க்க தவறிய மக்கள் ஓடிடியில் கண்டிப்பாக பார்ப்பார்கள். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது கடந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்ட அவதார் 2 திரைப்படம் தான். இது டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வந்திருக்கிறது. இதேபோன்று அடை மழைக்காலம் திரைப்படம் நெட்பிளிக்சிலும், மாலை நேரம் மல்லிப்பூ என்ற திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்திலும் ரிலீசாக இருக்கிறது.

இதுபோன்று அர்னால்டு குறித்து வெளிவந்துள்ள டாக்குமென்ட்ரி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதைப் போன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள பிளடி டாடி என்ற வெப் சீரிஸ்  ஹிந்தியில் ஜியோ சினிமாவில் ரிலீசாகி இருக்கிறது.

இதேபோன்று ஹாட்ஸ்டாரில் அவ்வை சண்முகி,பகவதி,பிரண்ட்ஸ், அன்பே சிவம்  போன்ற திரைப்படங்கள் தமிழில் இடம் பெற்று இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Most Popular