Friday, September 13, 2024
- Advertisement -
Homeசினிமாதல அஜித்திற்கு என்ன ஆனது ..?தொலைக்காட்சி செய்தியாள் பரபரப்பான தல ரசிகர்கள்..! உண்மை என்ன..?

தல அஜித்திற்கு என்ன ஆனது ..?தொலைக்காட்சி செய்தியாள் பரபரப்பான தல ரசிகர்கள்..! உண்மை என்ன..?

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த தல அஜித் தற்போது மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருப்பதாக தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தியை பரப்பி வருகிறது.

- Advertisement -

துணிவு திரைப்படம் தந்த தோல்வியால் விடாமுயற்சி மீது தல ரசிகர்கள் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். இப்பொழுது திரைப்படம் வெளியிடப்படும் என்று இன்றும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் விறுவிறுப்பாக எந்த அப்டேட்ஸும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு வருவதில்லை.

இந்தத் திரைப்படம் அதிகமாக அசர் பைஜான்னில் எடுக்கப்படுவதால் அந்த அளவிற்கு எந்த லீடும் கிடைப்பதில்லை. படக்குழுவினர்களை எதையாவது வெளியிட்டால்தான் திரைப்படத்தைப் பற்றிய தகவல் தெரிகிறது. தற்பொழுது தல அஜித் குறித்து வந்திருக்கும் செய்தி தல ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

அஜித்திற்கு என்னதான் ஆனதென்று சமூக வலைத்தளங்களில் அவருடைய ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் ஆனால் அவர்கள் பயந்தளவிற்கு தல அஜித்திற்கு எதுவும் நிகழவில்லை .அவர் வழக்கமாக தன் உடலை முழு பரிசோதனை செய்து கொள்வாராம். அது போல் செய்வதற்காக தான் தற்பொழுதும் மருத்துவமனைக்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

50 வயதிற்கு மேலான ஒவ்வொரு மனிதனும் தன்னை முழு பரிசோதனை செய்து கொள்வது அவசியம் .அது தனக்குள் இருக்கும் நோயின் முதல் படியிலேயே தெரிந்துவிடும் .அதுக்கு சிகிச்சை பெற்று குணமடைய வாய்ப்பு உண்டு. அதனால் தான் 50 வயதிற்கு மேலானவர்கள் இந்த பரிசோதனையை செய்து கொள்கிறார்கள். அப்படித்தான் தற்பொழுது 52 வயதான தல அஜித் தன் உடலை முழு பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார் .

இதை தவறாக புரிந்து கொண்ட தொலைக்காட்சி ஊடகங்கள் அவரைப் பெரிய நோயாளி போல சித்தரித்து தகவல்களை பரப்பி வருகிறார்கள். ஆனால் உண்மையில் அவர் நலமாக இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது .இது அறிந்த தலையின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு அமைதி அடைந்திருக்கிறார்கள்.

Most Popular