Tuesday, May 21, 2024
- Advertisement -
Homeசினிமாசூர்யா பிறந்தநாளன்று முக்கியமான வீடியோ… அடுத்தடுத்த அப்டேட்களை அளிக்க தயாராகும் கங்குவா படக்குழு…

சூர்யா பிறந்தநாளன்று முக்கியமான வீடியோ… அடுத்தடுத்த அப்டேட்களை அளிக்க தயாராகும் கங்குவா படக்குழு…

கங்குவா திரைப்படம் குறித்த முக்கி அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

10 மொழிகளில் உருவாகும் கங்குவா

நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யா இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் கடந்தாண்டு ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியானது.

இதனைத் தொடர்ந்து கமல் நடித்த விக்ரம் படத்தில் ‘ரோலக்ஸ்’ என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதேபோல் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி படத்திலும் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தார்.

- Advertisement -

இதற்கிடையில் பாலா இயக்கத்தில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு ஷுட்டிங் நடைபெற்ற ‘வணங்கான்’ படத்தில் இருந்து சில காரணங்களால் சூர்யா விலகினார். இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 42வது பட அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.

- Advertisement -

இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்னும் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் தயாராகி வருகிறது.

சூர்யாவுக்கு இரண்டு கதாநாயகிகள்

இந்த படம் மூலம் பாலிவுட் நடிகைகளான திஷா பதானி மற்றம் மிருணாள் தாகூர் ஆகியோர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்கள். கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட சூர்யா 42 படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை, ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யா ஜோடியாக திஷா பதானியும் காமெடி கேரக்டரில் யோகி பாபுவும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் கொடைக்கானல் வனப்பகுதிகளில் படத்தின் முக்கியமான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன.

இரண்டு பாகங்களாக உருவாகிறதா கங்குவா?

இந்நிலையில் கங்குவா திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய காலத்துக்கும், முந்தைய பிறவிக்கும் உள்ள தொடர்புதான் கங்குவா திரைப்படத்தின் கதைக்களம் என்று கூறப்படுகிறது.

சூர்யாவுக்கு வித்தியாசமான திரைப்படமாக கங்குவா இருக்கும் என்றும், படத்தின் சிஜி பணிகள் மும்பையில் நடைபெற்று வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.

முக்கியமான அப்டேட்களுடன் கங்குவா

இந்த நிலையில் சமீபத்தில் கங்குவா படத்தில் இருந்து முக்கியமான பாடல் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்கார் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலின் நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித் இந்த படத்தில் பணி புரிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் 23ஆம் தேதி சூர்யா பிறந்தநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கங்குவா திரைப்படத்திலிருந்து கிளிம்ஸ் காட்சிகள் வெளியாக உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவலால் உற்சாகமடைந்துள்ள சூர்யா ரசிகர்கள், கங்குவாவின் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக காத்திருக்கின்றனர்.

Most Popular