கடந்த வாரம் வெளியிடப்பட்ட போர் தொழில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்தத் திரைப்படத்தை இயற்கையை இயக்குனர் விக்னேஷ் ராஜா இதற்கு முன்பு ஐ ஹேட் யூ -ஐ லவ் யூ என்ற வெப்சீரிஸை எழுதி இயக்கி இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து அவர் வெள்ளித்திரையில் இயக்கிய முதல் திரைப்படம் போர் தொழில் ஆகும். இந்த திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களாக சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அசோக் செல்வனும் நடிகர் சரத்குமாரும் நடித்திருக்கிறார்கள்.
சீரியல் கில்லர்ஸ் என்று சொல்லப்படும் சைக்கோவில் மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இது வெளியிடப்படுவதற்கு முன்னால் இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை. ஆனால் வெளியிடப்பட்டது முதல் வாரத்திலேயே இத்திரைப்படம் ரசிகர்களை பெரும் அளவில் ஈர்த்திருக்கிறது.
இது அதிர்ஷ்டமா என்னவென்று தெரியவில்லை. தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கும் ஆதி பிரஸ் மற்றும் பொம்மை திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெறாத காரணத்தினாலேயே இன்னும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்ட முதல் வாரத்திலேயே பதிமூணு புள்ளி ஐந்து கோடி ரூபாய் வரை வசூலை பெற்றிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவில் எந்த செலவும் இவர்கள் செய்யவில்லை.
இது ஒரு லோ பட்ஜெட் திரைப்படம் என்றே சொல்லலாம். எதிர்பாராத அசுர வெற்றியை அடைந்திருக்கிறது போர்த் தொழில் திரைப்படம் விடுமுறை நாட்களில் கூட திரைப்படத்தின் மீது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக திரைப்படத்தின் பிரபலங்களான அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கத்தில் சக்சஸ் மீட் என்ற நிகழ்ச்சியை வைத்திருக்கிறார்கள். அதில் இருவரும் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
டீசர், ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் கிளிம்ஸ் செகண்ட் களிம்ஸ் என்றெல்லாம் பல பில்டப்புகளை கொடுத்து திரைப்படத்திற்கு பிரமோஷன்கள் செய்து விளம்பரப்படுத்தி வெளியிடப்படும் திரைப்படங்களை ஒப்பிடுகையில் எந்த வித விளம்பரமும் இல்லாமல் வெளியிடப்பட்டு கதையின் அமைப்பாலும் நடிகர்களின் திறமையான மட்டுமே இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறது. இதுவே உண்மையான வெற்றி என்றும் கூறலாம்.