நடிகர் தனுஷ் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் வெளியானது. பெரிய படம் ஏதும் வராத நிலையில் எந்த போட்டியும் இன்றி தனுஷ் படம் ஓடியது.
கல்வியை வியாபாரம் ஆக்குவதை தடுப்பது குறித்து தனுஷ் படம் பேசியது. இந்த படம் தமிழில் விட தெலுங்கில் அதிக வசூலை பெற்றது. இதற்கு காரணம் நடிகர் தனுஷ் ஹைதராபாத்துக்கு நேரடியாக சென்று பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
தன்னுடைய படத்திற்கான ப்ரோமோஷன் வேலையை தீவிரமாக அவர் செய்ததன் காரணமாக நடப்பாண்டில் தெலுங்கில் அதிக வசூலை எட்டிய தமிழ் டப்பிங் திரைப்படம் என்ற பெருமையை வாத்தி பெற்றிருக்கிறது.
அஜித் நடித்த துணிவு திரைப்படம் 4 கோடி ரூபாயும் வாரிசு திரைப்படம் 25 கோடி ரூபாய் தெலுங்கில் பெற்ற நிலையில் தனுஷின் சார் திரைப்படம் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மற்ற பெரிய ஹீரோக்களின் படம் எதுவும் வராதது என்று கூறப்படுகிறது.
மேலும் இன்னும் ஒரு மாதத்திற்கு கூட பெரிய படங்கள் எதுவும் வராததால் வாத்திக்கு எந்த சிக்கலும் இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக வாத்தி போட்ட பணத்தை எடுத்து சூப்பர் ஹிட் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. எனினும் தமிழ்நாட்டில் திருச்சிற்றம்பலம் செய்த வசூலை வாத்தி திரைப்படம் முறியடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அசுரனுக்கு பிறகு 100 கோடி ரூபாய் வசூலை எட்டிய இரண்டாவது தனுஷ் திரைப்படம் என்ற பெருமையை வாத்தி பெற்று இருக்கிறது. இதன் மூலம் டயர் 2 நடிகர்களில் தனுஷ் தற்போது முதல் இடத்தில் நீடிக்கிறார். தனுஷின் வாத்தி ஓடியது அடுத்து தற்போது அவருடைய அடுத்த படமான கேப்டன் மில்லருக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.